உலக மக்கள்தொகை தினம்
உலக மக்கள்தொகை தினம், ஜூலை 11 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளின் அவசரத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்த கவனத்தை ஈர்க்கவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு இந்நாள் முன்னெடுக்கப்பட்டது. 11 ஜூலை 1987 ஆம் தேதியாகிய அன்று உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே இந்நாளை ஏறெடுக்கத் தூண்டியது.
தற்போதைய உலக மக்கள் தொகை 760 கோடி. ஐ.நா.வின் அறிக்கையின் படி இது 2030-ல் 8.6 கோடியை எட்டும் என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய உலக மக்கள் தொகையுடன் 8.3 கோடி மக்கள் இணைக்கப்படுகின்றனர். உலகின் மக்கள் தொகை மிகுந்த நாடுகளான சீனா மற்றும் இந்தியாவின் மக்கள் தொகை முறையே 140 கோடி மற்றும் 130 கோடியாகும். இவை முறையே உலக மக்கள் தொகையின் 19% மற்றும் 18% ஆகும். இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது 2024 –ல் இந்தியா சீனாவை மிஞ்சும் எனறு கணக்கிடப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை தினம் 2018-ன் கருத்து வாசகம்: குடும்பக் கட்டுப்பாடு ஒரு மனித உரிமை.
மனித உரிமைக்கான உலக மாநாடு தெகரானில் 1968 –ல் நடந்தது. இந்த ஆண்டு 50 வது ஆண்டு ஆகும். உலக முழுவதும் குடும்பக் கட்டுப்பாடு ஒரு மனித உரிமை என்ற தீர்மானம் இந்த மாநாட்டிலேயே நிறைவேறியது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபரும் தமது எதிர்காலத்தின் போக்கையும் இருப்பையும் நிரணயிக்கும் மனித உரிமையைப் பெறுகிறார்.
தெகரான் பிரகடனத்தின் 16 வது பிரிவு பின்வருமாறு கூறுகிறது:
குடும்பக் கட்டுப்பாட்டுக்கான மனித உரிமையை நிலைநிறுத்த ஒன்பது அளவு கோல்கள்: ஒவ்வொரு தனிமனிதனும் சமுதாயமும் கடைபிடிக்க வேண்டிய ஒன்பது அளவுகோல்களை உலக நாடுகள் மக்கள் தொகை நிதியமும் (UNFPA) உலக சுகாதார நிறுவனமும் (WHO) அங்கீகரித்துள்ளன:
பாதுகாப்பான தனார்வ குடும்பக்கட்டுப்பாட்டை அணுகுவது ஒரு மனித உரிமை ஆகும். ஆனால், வளரும் நாடுகளில் உள்ள கர்ப்பத்தை விரும்பாத 21.4 கோடி பெண்கள் பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைபிடிக்க முடியவில்லை. தகவல் மற்றும் சேவைகளைப் பெற முடியாமை, அல்லது பெற்றோர் மற்றும் சமுதாய ஆதரவு இன்மை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2015-16ன் படி இந்தியாவில் மணமான மகளிரில் (15-49 ஆண்டுகள்) 53.5 % பேர் குடும்பக் கட்டுப்பாடு முறைகளைக் கடைபிடிக்கின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டின் நிறைவாகா தேவையில் இருப்போர் 12.9 % (அடுத்த பிறப்பைத் தள்ளிப்போட நினைக்கும் அல்லது இனி குழந்தைகள் தேவை இல்லை என்று கருதும் எந்த ஒரு குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும் பயன்படுத்தாத இனப்பெருக்க வளம் மற்றும் பாலியல் விருப்புடையோர்).
குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிப்பதும் பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கத் தேவையானவைகள் ஆகும். இதன் மூலம் சமுதாய சுகாதாரத்தையும் வளர்ச்சியையும் பேணிக்காக்க முடியும்.
தொடர்புள்ள இணைப்புகள்:
இந்தியாவில் பல்வேறு சுகாதார வசதிகளிடம் இருந்து பெறக்கூடிய குடுமபக் கட்டுப்பாட்டு முறைகள்: humdo.nhp.gov.in/
World Population Day 2017- .nhp.gov.in/
குறிப்புகள்:
www.un.org/en/events/populationday
www.un.org/en/development/desa/population/l
www.who.int/news-room/fact-sheets/detail/f
rchiips.org/nfhs/pdf/NFHS4/India.pdf