பல்வேறு நலப்பராமரிப்பு வழங்கும் நிறுவனங்களில், நலப்பராமரிப்பு சேவைகளின் எண்மின்னாக்கப் (digitization) பெருக்கம் அதிகரித்துள்ளது. மின் சுகாதாரப் பதிவுகள் (உ-ம். தனிநபர் சுகாதாரப் பதிவுகள்), பராமரிப்பின் தரத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் திறன் கொண்டதும் அன்றி சுகாதாரத் தகவல் மற்றும் மருத்துவத் தரவுகளின் மேலாண்மையும் மேம்படுத்துகிறது என்று மருத்துவர்களும் மருத்துவமனையியல் வல்லுநர்களும் கூறியுள்ளனர். சுகாதார மின்பதிவு, நோயாளிக்கும் நலப்பராமரிப்பு வழங்குநருக்கும் இடையில் சிறந்த தொடர்பை ஏற்படுத்துவது உள்ளடக்கிய மருத்துவத் தகவலை எடுத்துச் செல்லும் திறனையும் அதிகரிக்கிறது. இது பொது சுகாதார வல்லுநர்கள் நோயின் போக்கைப் புரிந்து கொள்ளவும் சிறந்த முறையில் நோயைக் கண்டறியவும் துணை செய்கிறது. மேலும், நோயாளிகளின் தரப்பில் இருந்து நோக்கும் போதும், இது சேவைகளை மேம்படுத்தி, மீண்டும் செய்யத் தேவையற்ற சோதனைகளை குறைக்கவும் செய்கிறது. இருப்பினும், இத்தகைய மருத்துவப் பதிவுகள் கூடுதலும் நிறுவனம் சார்ந்தவைகளாகவே இருக்கின்றன; ஏனெனில் இவைகள் குறிப்பிட்ட நலப்பராமரிப்பு நிறுவனங்களுக்குள் வரையறுக்கப் பட்டவைகளாக உள்ளன.
மேலும், இந்த மருத்துவமனைத் தரவுகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன; நோயாளிகளுக்கு இத்தரவுகள் பொதுவாகக் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பாலும் காகிதப் பதிவுகளுடனேயே போராடிக் கொண்டு இருக்கின்றனர். இன்று நிறுவன மைய நலப்பராமரிப்பு முறை மாறி நோயாளி மைய நலப்பராமரிப்பு முறை வளர்ந்து வருகிறது. இந்த மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக, இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சரகமும் மின்னியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகமும் இணைந்து தனிநபர் சுகாதாரப் பதிவு மேலாண்மை முறையை (எனதுநலப்பதிவு என்ற பெயரில்) இந்தியக் குடிமக்களுக்காக உருவாக்கியுள்ளது.
எனதுநலப்பதிவு கையேட்டிற்காக இங்கே சொடுக்குக
உங்களது சொந்த நலப்பதிவுகளை உருவாக்க: https://myhealthrecord.nhp.