அறிமுகம்
தர்க்க ரீதியான காரணங்கள் எதுவும் இல்லாத போதும் தங்கள் கைகளைச் சிலர் திரும்பத் திரும்பக் கழுவுவதையும், தேவையில்லாத போதும் திரும்பத் திரும்ப சுத்தப்படுத்துவதையும், குளிப்பதற்கு வழக்கத்துக்கு மாறாக பலமணி நேரங்கள் எடுத்துக் கொள்வதையும், புறப்படுவதற்கு அசாதாரணமாகப் பல மணி நேரங்களை செலவிடுவதையும், ஒன்றைச் செய்வதிலும் அதன் ஒழுங்கிலும் மிகவும் குறிப்பாக இருபதையும் அல்லது சிலர் சொல்லுவது போல் தாங்கள் நினைக்க விரும்பாத வன்முறை அல்லது பாலியல் எண்ணங்கள், படிமங்கள் போன்றவைத் திரும்பத்திரும்ப ஏற்படுவதையும் போன்ற அசாதாரணமான நடத்தைகளை நீங்கள் ஒருசிலரிடம் கண்டு வியந்திருக்கலாம். அப்படியானால் அந்த நபரை ஒரு உளவியல் நிபுணர் சோதித்தறிய வேண்டும். இவைகள் அலைக்கழிக்கும் மனக்கோளாறுகளின் அறிகுறிகளாக இருக்கலாம்.
அலைக்கழிக்கும் மனக்கோளாறு போன்றே காணப்படும் வேறு சில கோளாறுகளும் இருக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில் மனக்கலக்கம் மற்றும் அந்த மனக்கலக்கத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று சில ஒரே மாதிரி நடத்தைகள் அல்லது மன வேலைகளில் ஈடுபடச் செய்யும் அலைக்கழிக்கும் கவலை ஒருசிலருக்குக் காணப்படும். எனவே சமீப காலமாக இவைகளும் அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள் நோய்த்தொகுதிகளோடு ஒருங்குவைத்துக் எண்ணப்படுகின்றன. எடுத்துக்காட்டுகள்:
பொது மக்கள் தொகையில் அலைக்கழிக்கும் மனக்கோளாறு 2-3 % பேருக்கு வாழ்நாள் கோளாறாக உள்ளது, நூறு பேரில் 2-3 பேருக்கு வாழ்நாள் முழுவதும் இக்கோளாறு உள்ளது என்று இதற்குப் பொருள். ஆண் பெண் இருபாலாரையும் இது பாதிக்கிறது.
பொதுவாக இது இருபது வயதில் தொடங்கும். இருந்தாலும் இது எந்த வயதிலும் ஆரம்பிக்கலாம். இரண்டு வயதுக் குழந்தைகளுக்கும் ஏற்படக் கூடும். மனச்சோர்வு, சமூகஅச்சம், டூரெட்டின் சீர்கேடு போன்ற கோளாறுகளுடன் பெரும்பாலும் இது இணைந்து காணப்படுகிறது.
அலக்கழிக்கும் மனக்கோளாறு சிகிச்சை அளிக்கக் கூடிய ஒரு நோய் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே, சந்தேகம் ஏற்பட்டால் அல்லது இது போன்ற அறிகுறிகள் கொண்ட யாரையாவது அறிந்தால் உடனடியாக உதவியை நாடவும்.
குறிப்புகள்:
Saddock BJ., Saddock VA. (2005) Obsessive compulsive disorder in Comprehensive textbook of Psychiatry (8th ed.) 1773-1777 Philadelphia, PA, Lipppincott Williams & Wilkins.
Sadock BJ, Sadock VA. Kaplan & Sadock’s Synopsis of Psychiatry: Behavioral Sciences/Clinical Psychiatry (10th ed.). 604-612 Philadelphia, PA, Lippincott, Williams & Wilkins; 2007.
American Psychiatric Association. (2013). Diagnostic and statistical manual of mental disorders (5th ed.). Arlington, VA: American Psychiatric Publishing.
மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகளைச் சொடுக்கவும் (For more information please click the links given below)
டாக்டர். மதுசூதன் சிங்க் சோலங்கி, உளவியல் ஆலோசனை நிபுணர், உளவியல் மற்றும் நடத்தை அறிவியல் துறை, சாக்கெத் நகர மருத்துவமனை, புதுதில்லி, அவர்களால் இக்கட்டுரை எழுதப்பட்டு 4-5-2015 அன்று அளிக்கப்பட்டது.
நோயறிகுறிகள்
அலைக்கழிக்கும் மனக்கோளாறு: இக்கோளாறின் இயல்புகள் வருமாறு: (Obsessive Compulsive Disorder: It’s a disorder characterised by)
1. அதிகமான கவலை அல்லது அச்சத்தை உருவாக்கும் தொடர்ந்து ஏற்படும் வலிமையான எண்ணங்களும் படிமங்களும் (மனக்கோளாறு).
2. மனக்கலக்கத்தைத் தணிக்க அல்லது சமன்செய்யும் நோக்கத்தோடு தொடர்ந்து செய்யப்படும் சடங்குகள் அல்லது நடத்தைகள் அல்லது மனச்செயல்கள் (அலைக்கழிப்பு)
தனியாகவோ அல்லது இணைந்தோ நிகழ்வன (Happening alone or in combinations)
உதாரணமாக, ஒருவர் தனது கைகள் அழுக்காக இருப்பதாகத் தொடர்ந்து எண்ணினால் (மனக்கோளாறு) அந்த மனக்கலக்கத்தைத் தணிக்க அவர் தம் கையை அடிக்கடி கழுவுவார் (அலைக்கழிப்பு).
அலைக்கழிக்கும் மனக்கோளாறு உடையவருக்கு கடுமையான மனக்கலக்கத்தோடு கீழ்க்கண்டவைகளிலும் ஈடுபடுவார்: (A person having OCD experiences severe anxiety and may be found indulging in)
இந்த அறிகுறிகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்று பெரும்பாலும் துன்பப்படுபவர்கள் அறிந்து கொள்வார்கள். அவற்றைத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமால் மேலும் துயரத்துக்கு உள்ளாவார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டது போல் உணர்வார்கள். இவ்வறிகுறிகள் அவர்களது நேரத்தில் பெரும்பான்மையை ஆக்கிரமிக்கும். இதனால் உணர்வுபூர்வ, சமூக, நிதிசார்ந்த மற்றும் பிற சிக்கல்கள் உருவாகும்.
உடல்வடிவ அதிருப்திக் கோளாறு (Body Dysmorphic Disorder): இக் கோளாறால் துன்பப் படுபவர்கள், உடல் வடிவிலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட உறுப்பின் வடிவத்திலும் தாங்களாகவே ஒரு குறையை எண்ணிக்கொள்வார்கள் அல்லது கற்பனை செய்து கொள்வார்கள். உடல் தோற்றத்தில் இருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும் குறைகளால் ஏற்படும் மனக்கவலையை மறைக்க தொடர் உடல் மற்றும் மன நடவடிக்கைகளில் ஈடுபடுவர். எடுத்துக்காட்டாக, பிறருக்கு அத்தகைய குறை தென்படாவிட்டாலும் ஒருவர் தனது மூக்கு ஒரு புறமாக சாய்ந்திருப்பதாக நம்புவது.
மறைப்பெண்ணக் கோளாறு (Hoarding disorder) : பொருளின் மதிப்பும் பயன்பாடும் எவ்வாறு இருந்தாலும் இக்கோளாறு உடையவர்களுக்குப் பொருட்களைப் பிரிவது என்பது மிகவும் கடுமையான ஒன்றாகும். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணர்வியல், உடலியல், சமூகவியல், பொருளியல் ஏன், சட்டவியல் பிரச்சினைகள் கூட விளையலாம். சிலருடைய குறிப்பான சில பொருட்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கில் இருந்து இது வேறுபட்டது. இக் கோளாறு உடையவர்கள் ஏராளமான பொருட்களை சேகரித்து, வீட்டிலும் பணி இடத்திலும் செயலாற்றும் முக்கிய இடங்களை நிறைத்து விடுவார்கள். அவ்விடம் எதற்காக இருக்கிறதோ அதற்காக அதைப் பயன்படுத்த முடியாமல் போகும்.
முடி பிடுங்கும் கோளாறு (Trichotillomania or Hair pulling disorder): இக் கோளாறு உடையவர்களுக்குத் தங்கள் முடியையே பிடுங்கி எடுக்கும் உணர்வு தோன்றும். அவ்வுணர்வை அடக்கும் போது மனக்கலக்கம் ஏற்படும். முடியைப் பிடுங்கும் போது மனக்கலக்கம் குறையும். இதனால் படிப்படியாகத் தலையில் உள்ள முடி காணத்தக்க அளவுக்குக் குறையலாம். சில வேளைகளில் அவர் முடியைப் பிடுங்கி உண்ணலாம். தகுந்த காரணம் இன்றி முடி குறைதலோ வயிற்று வலியோ உண்டாகும் போதே இவர்களுக்கு இந்நோய் இருப்பது மருத்துவ ரீதியாகக் கண்டறியப்படும்.
தோல் உரிக்கும் கோளாறு (Excoriation (Skin-Picking) Disorder) : தொடர்ந்து அடிக்கடி தோலை உரிப்பதே இக் கோளாறின் இயல்பு. இதனால் தோல் புண்கள் உண்டாகும். இப்பழக்கத்தை நிறுத்த பல முறை முயன்றாலும் இக் கோளாறு கொண்டவரால் இதை நிறுத்த முடியாது. இதன் விளைவாகப் பெரும்பாலும் தொற்று, வடு, மற்றும் உருச்சிதைவு ஆகிய மருத்துவச் சிக்கல்கள் ஏற்படலாம்.
குறிப்புகள் (References)
மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் தொடர்புகளைச் சொடுக்கவும்
காரணங்கள்
அலைக்கழிக்கும் மனக்கோளாறும் அதனோடு தொடர்புடைய பிற கோளாறுகளும் சிக்கலான பல காரணிகளைக் கொண்ட உயிர்-உளவியல்-சமூகக் காரணங்களின் விளைவாகும். அவை இதய நோய்கள் அல்லது நீரிழிவு சர்க்கரை நோய் வகை-1 போன்ற கூட்டுக் கோளாறுகள் ஆகும். மரபியல், உயிரியல், உளவியல், சமூகவியல், வளர்ச்சிக் காரணிகளின் சிக்கலான இடைவினையின் விளைவாக ஏற்படுகின்றன என்று அண்மைக்கால ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. ஆகவே, ஒருவருக்கு அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய பிற கோளாறுகளும் பின் வரும் காரணிகளின் சேர்க்கையால் ஏற்படலாம்:
குறிப்புகள்:
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும்
நோய்கண்டறிதல்
அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய கோளாறுகளும் கீழ்வருமாறு கண்டறியப்படலாம்
1. அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளும் போன்றே அறிகுறிகளைக் காட்டும் வேறு மருத்துவ நிலைமைகளையும் போதை மருந்தின் விளைவுகளையும் முதலில் இல்லை என உறுதிப்படுத்துதல்.
2. மருத்துவ ரீதியான அறிகுறிகள், விவரமான நோய்வரலாறு, மனநிலைச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் உளவியல் மதிப்பீட்டாய்வு.
குறிப்புகள்
American Psychiatric Association. (2013). Diagnostic and statistical manual of mental disorders (5th ed.). Arlington, VA: American Psychiatric Publishing.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும் (For more information please click the links given below)
நோய்மேலாண்மை
அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகள் சிகிச்சை அளிக்கக் கூடியவையே. பெரும்பான்மையான நோயாளிகள் தகுந்த, முறையான சிகிச்சைக்குப் பின் நல்ல முறையில் வழ்ந்து வருகின்றனர்.
நோய்க்கடுமை மற்றும் நோயாளியின் விவரங்கள் (உ-ம். வயது/பால்/உடல் எடை/சமூக ஆதரவு/உளவியல் மனப்பாங்கு/கடந்தகால வரலாறு/ குடும்ப நோய்வரலாறு/ நோயாளிக்கு இருக்கும் பிற உடல் அல்லது மன நலக் கோளாறுகள்) ஆகியவற்றைப் பொருத்து அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளால் வருந்துவோரின் நோய் மேலாண்மை மாறுபடும். நடத்தையியல் சிகிச்சையுடன் மருந்துகளையும் பயன்படுத்தும் போது பலன் சிறப்பாக இருக்கும்.
பொதுவாக குணப்படுத்தும் சிகிச்சை முறை கீழ்வருவனவற்றின் சேர்க்கையாக அமையும்:
1. மருந்துகள்: இதில் பல எதிர்-மனக்கலக்க மற்றும் எதிர்-மனச்சோர்வு மருந்துகள் அடங்கும்.
SSRI-கள் (தேர் செரோடோனின் மறுபயன்பாடு தடுப்பான்கள்). உ-ம்: ஃப்ளுக்ஸிடைன் (Fluoxetine), ஃப்ளூவோ ஆக்சமைன் (Fluvoxamine), செர்ட்ராலைன் (Sertraline), பரோக்ஸிடைன் (Paroxetine) போன்றவை.
செரோடோனின் – நோர்பைன்ஃப்ரைன் மறுபயன்பாடு தடுப்பான்கள்: (Serotonin-Norepinephrine Reuptake Inhibitors (SNRIS)) தெஸ்வென்லாஃபேக்ஸைன்(Desvenlafaxine), வென்லாஃபேக்ஸைன் (Venlafaxine), டியூலாக்ஸ்டின் (Duloxetin) ஆகிய எதிர்-மனச்சோர்வு மருந்துகள் சில அலைக்கழிக்கும் மனக்கோளாறுகள் மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளின் கூடுதல் சிகிச்சைக்கு பயனுள்ளவையாக இருக்கும்.
TCA-க்கள் (டிரைசைக்ளிக் எதிர் - மனச்சோர்வு மருந்துகள்) உ-ம்: குறிப்பாகக் குளோமிப்ரமைன் (Clomipramine)
செரோடோனினைத் தவிர்த்து, இந்த பழைய எதிர்-மனச்சோர்வு மருந்தும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய பிற கோளாறுகளுக்கும் தகுந்த மருந்தாகக் கருதப்பட்டது. இவை பிற நரம்புகடத்திகள் மீதும் செயல் புரியக்கூடியவை. முதன்மை மருந்தாகத் தற்போது பயன்படுத்தப் படவில்லை என்றாலும், சில நோயாளிகளுக்கு அல்லது சில சமயங்களில் சிகிச்சையைப் பலப்படுத்த இரண்டாம்நிலை மருந்தாக இது இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பென்சோடயாசெப்பைன்கள் (Benzodiazepines(BZDs)
குளோனாசிபம் (Clonazepam), லோராசிபம் (Lorazepam), எட்டிசோலாம் (Etizolam), டையாஸ்பாம் (Diazepam), ஆக்ஆஸ்பாம் (Oxazepam), கார்டியாசெப்பாக்சைடு (Chordiazepoxide).
செரோட்டோனின் டோப்போமைன் முதன்மை இயக்கிகள்(Serotonin dopamine agonists (SDAs): உ-ம். சில நோயாளிகளுக்கு சிகிச்சையைப் பலப்படுத்த கூடுதல் மருத்துவமாகவும், தங்களுக்கு இருக்கும் அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளைப் பற்றிய புரிதல் இல்லாத நோயாளிகளூக்கும், அல்லது இருநோய் பாதிப்பு உளநோய் அறிகுறிகள் இருக்குமானாலும், ரிஸ்பெரிடோன் (Risperidone), பயன்தருவதாக உள்ளது.
மின் - அதிர்வு சிகிச்சை(Electro-convulsive therapy (ECT): மருந்துகளால் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு சில சமயம் இது பயன் உள்ளதாக இருக்கும்.
தலையோட்டின் குறுக்காகத் தொடர் காந்தத் தூண்டல் (Repetitive Trans Cranial Magnetic Stimulation (rTMS) : ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் சில நோயாளிகளுக்கு அறிகுறிகளை மேம்படுத்துவதில் பயன் இருப்பதைக் காட்டுகிறது. தொடர் ஆராய்ச்சிகள் தேவை.
உளவியல்சார் மூளையறுவை (Psychosurgery)
முற்றிலும் சிகிச்சைக்குப் பலன் கிட்டாதபோது வெண்நார்த்துமித்தல் (cingulotomy), உறைத்துமித்தல் (capsulotomy) போன்ற அறுவைசிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இவற்றால் நோய் குணமாகாது என்றாலும் சிகிச்சைக்கு பலன் கிடைக்க இவை உதவும்.
ஆழ் மூளைத் தூண்டல் (Deep brain stimulation) என்பது OCD-சிகிச்சைக்காக ஆய்வில் இருந்து வரும் இன்னொரு உத்தியாகும்.
பிற மருந்துகளான பஸ்பிரோன் (Buspirone), ப்யுப்ரோபியோன் (Bupropion) ஹைட்ரோகுளோரைடு (Hydrochloride), மிர்டாசாபின் (Mirtazapine), வால்ப்ரோயேட் (Valproate), கார்பமாசிபைன் (Carbamazepine) லித்தியம் (Lithium) ஆகியவை சேர்த்துக் கொடுக்கும் மருந்துகளாக சில நோயாளிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.
குறிப்பு: மருந்துகளை ஒரு நிபுணரின் வழிகாட்டுதல் படியே உட்கொள்ள வேண்டும். தேவையற்ற பக்க விளைவுகளோ அல்லது மோசமாகும் அறிகுறிகளோ ஏற்பட்டால் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
2. உளவியல் சிகிச்சைகள் (Psychotherapies)
அ. அறிவுசார் நடத்தை சிகிச்சை: (Cognitive behavioural therapy) இத்தகைய உளவியல் சிகிச்சை அலைக்கழிக்கும் மனக்கோளாறு மற்றும் தொடர்புடைய கோளாறுகளுக்கு மிகவும் பலனளிக்கும் சிகிச்சை ஆகும். இதில் சிகிச்சை அளிப்பவர், நோயாளி தமது கோளாறுக்குக் காரணமான காரணிகளைப் புரிந்துகொண்டு கையாள பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி உதவுகிறார். அறிவுசார் தவறுகள் சரிபடுத்தப் படுகின்றன. நடத்தை உத்திகளைப் பயன்படுத்தி விரும்பத் தகாத நடத்தைகள் குறைக்க அல்லது நிறுத்தப்படுகின்றன. ஆழ் மூச்சு போன்ற தளர்த்தல் உத்திகளைப் பயன்படுத்தி மனக்கலக்கத்தால் ஏற்படும் உடலளவிலான வெளிப்பாடுகள் கட்டுப்படுத்தப் படுகின்றன.
ஆ. ஆதரவு உளவியல் சிகிச்சை (Supportive psychotherapy) : நோயாளியுடன் ஆதரவு சிகிச்சை உறவை வளர்த்துக் கொண்டு பலவிதமான உளவியல் சிகிச்சை உத்திகளின் மூலம் நோயாளியிடம் ஒரு ஆரோகியமான மனநிலையை உருவாக்கும் அணுகுமுறையை இந்த உளவியற் சிகிச்சையை மேற்கொள்ளுகிறது.
இ. குடும்ப சிகிச்சை (Family therapy) : குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு அன்பானவர்களின் அலைக்கழிக்கும் மனக்கோளாறைப் புரிந்து கொள்ள குடும்ப உளவியல் சிகிச்சை உதவும். இதன் மூலம், அலைக்கழிக்கும் மனக்கோளாறும் தொடர்புடைய பிற கோளாறுகளும் அதிகமாகாத வண்ணம் புதிய தொடர்பு மற்றும் இடைவினைக்கான வழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இதனால் சிகிச்சைக்கு இணக்கம் ஏற்பட்டு விளைவும் மேம்படுகிறது.
ஈ. குழு சிகிச்சை (Group therapy) : இதில் OCD-யும் தொடர்புடைய பிற கோளாறுகளையும் கொண்ட சம்பந்தமில்லாத தனிநபர்களுக்கு இந்த உளவியல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பலனளிக்கும் சிகிச்சையை அளிக்கவும் ஆதரவை உருவாக்கவும் முடியும்.
முதன்மை சிகிச்சைகள் தவிர பிற துணை சிகிச்சைகளான இசை, கலை சிகிச்சைகளும், பலவிதமான தியான முறைகளும் சுவாச உத்திகளும் சில நோயாளிகளுக்கு உதவும்.
குறிப்புகள்
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளைச் சொடுக்கவும் (For more information please click the links given below)
தடுப்புமுறை
OCD மற்றும் தொடர்புடைய கோளாறுகளை முற்றிலுமாகத் தடுக்க முடியாது என்றாலும் அவற்றின் சிக்கல்களைத் தடுக்க முடியும். குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரோக்கியமான உடல் மற்றும் மன வாழ்க்கை முறையைத் தழுவிக் கொள்ளுவதனாலும் மனவழுத்தத்தை சிறந்த முறையில் கையாளக் கற்றுக் கொள்ளுவதின் மூலமும் நோயின் போக்கையும் விளைவையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அவற்றில் அடங்குவன:
நோய் மேலும் மோசமாகாமல் தடுப்பதற்கும், சிகிச்சையின் சிறந்த பலனைப் பெறவும் ஆரம்ப கட்ட நோய்கண்டறிதல் அவசியமாகும். இதைப் பின்வரும் வகையில் நிறைவேற்றலாம்:
நினைவில்கொள்ளவும் (Remember): மனநலப் பிரச்சினைகளுக்கு ஆரம்பக் கட்ட சிகிச்சையே சிறந்த பலனையும் தரமான வாழ்க்கையையும் அளிக்கும். சரியான சிகிச்சையின் மூலம் பெரும்பாலான அலைக்கழிக்கும் மனநோய் மற்றும் பிற தொடர்புடைய கோளாறுகளைக் கொண்டவர்களாலும் நல்ல வாழ்க்கையைத் தொடர முடியும்.