Cancer.png

புற்றுநோய்

கட்டுப்பாடற்ற உயிரணுப்பிரிவால் திசுக்கள் அசாதாரண முறையில் வளர்ச்சி அடைவதே நோய்த்தொகுதியான புற்று நோயின் தன்மையாகும்.

இரண்டு முக்கிய வகை புற்று/கட்டி உண்டு: தீங்குவிளைவிக்கும் கட்டியும் தீங்கு விளைவிக்காத கட்டியும்.

தீங்குவிளைவிக்கும் கட்டிகள்: இவையே புற்றணுக்கள் ஆகும். இவை அருகில் உள்ள நல்ல உயிரணுக்களையும் உடலுறுப்புகளையும் ஆக்கிரமித்து அழித்துவிடும். புற்று தூரத்திலுள்ள உடற்பகுதிகளுக்கும் நிணநீர் மண்டலம் அல்லது இரத்த ஓட்டத்தின் மூலமாகப் பரவும். எல்லா கட்டிகளுமே புற்று அல்ல.

தீங்குவிளைவிக்காத கட்டிகள்: இவ்வகைப் புற்று, கட்டுப்பாடு இன்றி வளரவோ அருகில் உள்ள திசுக்களை ஆக்கிரமிக்கவோ உடல் எங்கும் பரவவோ செய்வதில்லை.

மனிதர்களைப் பாதிக்கும் 200 வகையான அறியப்பட்ட புற்று நோய்வகைகள் உண்டு. பெரும்பாலான புற்றுநோய்கள் தோன்றும் இடத்தை வைத்தே பெயர் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, நுரையீரல் புற்றுநோய் நுரையீரலில் தோன்றுகிறது. மார்பகப் புற்று மார்பகத்தில் தோன்றுகிறது. உடலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குப் புற்று நோய் பரவுவது ‘நோயிடம் மாறல்’  (metastasis) என்று அழைக்கப்படுகிறது. புற்று நோயின் வகையையும் அதன் கடுமையையும் பொறுத்து அதன் அறிகுறியும் மருத்துவ முறையும் அமையும். பெரும்பாலான மருத்துவத் திட்டம் அறுவைமருத்துவம், கதிர்வீச்சு, வேதியல்மருத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

குறிப்புகள்:http://www.cancer.org/
http://www.who.int/cancer/en/
http://www.iarc.fr/
http://www.cdc.gov/cancer/

புற்று நோய் வளரும் உடலின் பகுதியில் அது ஏற்படுத்தும் பாதிப்பை வைத்தே அறிகுறிகள் உண்டாகும். ஆனால் பொதுவான அறிகுறிகளான எடை குறைவு, களைப்பு ஆகியவற்றை விட அதிகமான அறிகுறிகளை இந்நோய் உருவாக்கும். ஒருவர் இயல்பாக இருப்பதை விட அசாதாரணமான அறிகுறிகளை சில வாரங்களுக்கு மேல் தொடர்ந்து உணர்ந்தால் அவர் மருத்துவ கவனிப்பை நாட வேண்டும் என்பது பொதுவான ஆலோசனை ஆகும்.

புற்றுப்பகுதி அறிகுறிகள்: கட்டியின் அளவாலும் அது புண்ணாவதாலும் புற்று உள்ள பகுதியில் அறிகுறிகள் ஏற்படுகின்றன. உதாரணமாக உணவுக்குழாய் புற்றில் உணவுக்குழாய் சுருங்குவதால் விழுங்கும்போது வலி ஏற்படுகிறது. பெருங்குடல் மலக்குடல் புற்றால் குடல் சுருங்கி அடைப்புகள் ஏற்படுவதால் உண்ணுதல் மலங்கழித்தல் போன்ற பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்படுகின்றன.

முறையான அறிகுறிகள்: பொதுவான அறிகுறிகள் நேரடியான அல்லது இடமாறிப் பரவல் தொடர்பு உடையவை அல்ல; புற்று நோயின் மறைமுக விளைவுகளால் உண்டாவதே. அவற்றில் அடங்குவன:

  • எதிர்பாராத எடைகுறைவு
  • காய்ச்சல்
  • எளிதாகக் சோர்வடைதல்
  • தோல் நிறத்தில்/தோற்றத்தில் மாறுதல்
  • களைப்பாக உணர்தல்
  • தோலில் மாற்றங்கள்

குறிப்புகள்:

www.cancerresearchuk.org
www.nhs.uk

புற்றுநோய்க்கான பல்வேறு காரணங்களாவன:

  • மரபியல் காரணம்
  • கதிர்வீச்சுக்கு உட்படுதல்
  • சூரியன் மற்றும் புற ஊதாக் கதிர் படுதல்
  • உணவு முறையும் உடல் செயல்பாடுகளும்
  • பரம்பரை
  • காரணமறியாதவை

குறிப்புகள்: www.cancer.org
 

குறிகளும் நோய் அறிகுறிகளும் தோன்றுவதைக் கொண்டு பொதுப் பரிசோதனையின் மூலம் புற்று நோய் பொதுவாகக் கண்டறியப்படுகிறது.

பொதுப் பரிசோதனை: புற்று நோயைத் தொடக்க நிலையில் அறிகுறிகள் தோன்று முன்னரே கண்டறியத் திரையிடல் (Screening) என்னும் பரிசோதனை முறை உதவுகிறது. அசாதாரணமான திசுக்களோ, புற்றோ ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மருத்துவம் செய்வதுவும் குணப்படுத்துவதும் எளிது. புற்று வளர்ந்து பரவிய பின்னரே அறிகுறிகள் தோன்றுகின்றன. அதன் பின் புற்று நோய்க்கு சிகிச்சை செய்வதோ குணப்படுத்துவதோ கடினமாகி விடுகிறது. மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுப் போதெல்லாம்  அவர் புற்று நோய் இருப்பதற்கான சாத்தியக் கூறு இருக்கிறது என்று நினைக்கிறார் என்பது அர்த்தமில்லை என்பதைக் கண்டிப்பாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். புற்று நோயாக இருக்கலாம் என்று சந்தேகப்படும்போது ஒருவருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்படுகின்றன. இதில், இரத்தப் பரிசோதனை, X-கதிர், MRI, திசுச் சோதனை, புற்றுநோய்ச் சோதனை (pap smears), வரைவி (அ) ஸ்கேன் (CT scan), அகநோக்கல் (endoscopy) போன்ற பல சோதனைகள் அடங்கும்.

குணப்படுத்தும் மருத்துவம்: புற்று நோயைக் குணப்படுத்தும் மருத்துவம் என்பது நோயாளியை நன்றாக இருப்பதாக உணரவைக்கும் ஒரு முயற்சியே. புற்று நோயை எதிர்த்துத் தாக்கும் முயற்சி இதில் அடங்கலாம் அடங்காமலும் இருக்கலாம். புற்று நோயாளிகள் அனுபவிக்கும் உடல், உணர்வு, ஆன்ம, உளவியல்-சமுதாய வேதனையைக் குறைப்பது இம்மருத்துவத்தில் அடங்கியுள்ளது.

அறுவை மருத்துவம்: பிணி தீர்க்கும் மருத்துவத்திலும், வாழ்வை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அறுவை மருத்துவமே பெரும்பான்மையான பரவாப்புற்றுக்கு அடிப்படையான மருத்துவமாகும். வழக்கமாக திசுச்சோதனை தேவைப்படுவதால் தீர்க்கமாக நோயை அறிவதற்கும், வளர்நிலையைக் கணக்கிடவும் இதுவே பொதுவாக ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. ஓரிடத்தில் உள்ள புற்றை மொத்தமாகவும் சில நோயாளிகளில் அப்பகுதியில் இருக்கும் நிணநீர் முடிச்சுகளையும் சேர்த்து அகற்றவும் அறுவை மருத்துவத்தில் பொதுவாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

கதிர்வீச்சு: கதிர்வீச்சு மருத்துவம் அயனியாக்கக் கதிர்வீச்சைப் பயன்படுத்தி ஒன்றில் புற்றுநோயின் அறிகுறிகளைக் குணப்படுத்தவோ அல்லது சீர்ப்படுத்தவோ முயற்சி செய்கிறது. எல்லா நோயாளிகளிலும் பாதி அளவு சிகிச்சைக்கு இது பயன்படுத்தப் படுகிறது. இக் கதிர் வீச்சு ஒன்றில் குறும்சிகிச்சை எனப்படும் அக சிகிச்சையாகவும் (கதிர்வீசியை நேரடியாக திசுவுக்குள்ளேயே செலுத்துதல்) இருக்கலாம் அல்லது புற சிகிச்சையாகவும் இருக்கலாம்.

வேதிச்சிகிச்சை: மார்பகப் புற்று, பெருங்குடல் மலக்குடல் புற்று, கணையப் புற்று, எலும்புத்திசுப் புற்று, விதைப்புற்று, கருப்பைப்புற்று, சில நுரையீரல் புற்றுக்கள் ஆகிய வெவ்வேறு வகையான புற்று நோய்களைக் குணப்படுத்துவதில் அறுவை சிகிச்சையோடு இணைந்து வேதிச்சிகிச்சையும் பல நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

புற்றுநோய்க்கு மூலவுயிரணு மாற்று மருத்துவம் (Stem cell transplant): பொதுவாக முல உயிரணு மாற்றத்தில் அறுவை மருத்துவத்துடன் புற்று நோயை முற்றிலும் அகற்ற அதிக அளவிலான வேதிமருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. எலும்பு மச்சையில் உள்ள மூலஉயிரணுக்களும் இம்மருத்துவத்தல் இறந்துபடுகின்றன. மருத்துவத்திற்குப் பின் அழிக்கப்பட்ட மூல உயிரணுக்களுக்குப் பதிலாகப் புதிய மூல உயிரணுக்கள் செலுத்தப்படுகின்றன. இவை இரத்த மாற்றம் போலவே ஒரு நரம்பு வழியாக செலுத்தப் படுகின்றன. நாளடைவில் இவை எலும்பு மச்சையில் படிந்து வளர்ந்து இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இம்முறை மூல உயிரணு ஒட்டுதல் (engraftment) என அழைக்கப்டுகிறது.

குறிப்புகள்:
www.cancer.org
www.cancerresearchuk.org

புற்று நோய்க் கட்டியின் உயிரணுக்கள் (செல்) எவ்வித உயிரணுக்களின்  தன்மையை போல் உள்ளதோ அதைக் கொண்டு புற்று நோய் வகைபடுத்தப்படுகிறது. அதுவே அப்புற்று நோய்க் கட்டியின் மூலம் என்று கருதப்படுகிறது.

  • எலும்புத்தசைப் புற்று (carcinoma) :  இவ்வகைப் புற்று மேல் தோல் (epithelial) உயிரணுக்களில் இருந்து உண்டாகிறது. இது மிகவும் பரவலாக உள்ளது (குறிப்பாக வயதானவர்களிடம்). மார்பு, புரோஸ்டேட், நுரையீரல், கணையம், பெருங்குடல் ஆகிய புற்றுக்கள் இதில் அடங்கும்.
  • இணைப்புத்திசுப் புற்று (கழலை —Sarcoma): இணைப்புத் திசுக்களில் இருந்து உருவாகும் புற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது (அதாவது, எலும்பு, குருத்தெலும்பு, கொழுப்பு, நரம்பு போன்றவை). எலும்பு மச்சையின் (bone marrow) வெளியில் உள்ள இடைநுழைத் திசு உயிரணுக்களில் (mesenchymal cells) இருந்து இத் திசுக்கள் ஒவ்வொன்றும் உருவாகின்றன.
  • நிணநீர்சுரப்பிப் புற்றும் வெள்ளணுப்புற்றும் (lymphoma and leukemia): இவ்விருவகைப் புற்றுக்களும் இரத்த உற்பத்தி உயிரணுக்களில் இருந்து உண்டாகின்றன. இவை எலும்பு மச்சையிலிருந்து சென்று முறையே நிணநீர் முடிச்சுகளிலும் இரத்தத்திலும் முதிர்ச்சி அடைய முனைகின்றன. வெள்ளணுப்புற்று குழந்தைகளிடம் பரவலாகக் காணப்படுகிறது.
  • உயிர்ப்பணு புற்று (germ cell tumor): பல்லாற்றல் உயிரணுக்களில் (pluripotent) இருந்து உருவாகும் புற்று (பல்லாற்றல் உயிரணு என்பது உயிர் உருவாகும்போது மூன்று உயிர் அடுக்குகளில் ஏதாவது ஒரு வகையாகப் பிரிந்து கொள்ளும் ஆற்றல் வாய்ந்த மூல உயிரணுவாகும்: அகப்படலம் (வயிற்றின் உட்புறம், இரைப்பை குடல், நுரையீரல்), இடைப்படலம் ( தசை, எலும்பு, இரத்தம், சிறுநீர் பிறப்புறுப்பு) அல்லது புறப்படலம் (புறத்தோல் திசுக்களும் நரம்பு மண்டலமும்). இவ்வுயிரணுக்கள் பெரும்பாலும் விதை அல்லது கருப்பையில் இருக்கும்.
  • கருத்திசுக்கட்டி (blastoma): முன்னோடி உயிரணுக்களில் அல்லது கருத்திசுக்களில் இருந்து உருவாகும் புற்று. வயதுவந்தவர்களை விட குழந்தைகளுக்கு இது பரவலாகக் காணப்படுகிறது.

குறிப்புகள்training.seer.cancer.gov

  • புற்றுநோய் ஒரு தொற்றுநோய்: சளி இருமல் காய்ச்சலைப் போல் புற்று நோய் ஒரு தொற்று நோய் அல்ல. அது யாரையும் “பிடிப்பதும்” இல்லை. அது தொற்றுநோய் என்றோ ஒட்டுவாரொட்டி என்றோ வகைப்படுத்தப் படவில்லை.
  • புற்றுநோய் ஒரு பரம்பரை நோய்: பொதுவாக புற்று நோய் வாழ்க்கைமுறையால் ஏற்படும் நோயாகும். மது, புகையிலை, சிலவகை வேதியல் பொருட்கள், நச்சுப்பொருட்கள், இயக்குநீர் இடையூறுகள் (Hormonal disturbances) ஆகியவை புற்று நோய் ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கலாம்.
  • முறையான பரிசோதனைகளாலும், இன்றைய மருத்துவத் தொழிற்நுட்பத்தாலும் புற்று நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து விடலாம்: முறையான மருத்துவக் கவனிப்பு புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் திறனை அதிகரிக்கிறது என்றாலும் அதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. பல புற்றுக்கள் தொடக்கத்திலேயே கண்டறியப்படுகின்றன என்றாலும் சில கண்டறியப் படாமலேயே இருந்து விடுகின்றன.
  • ஊசித் திசு ஆய்வு அல்லது திசு ஆய்வு, புற்று உயிரணுக்களைக் கலைத்து அவற்றை உடலின் வேறு இடங்களுக்கு இடப்பெயர்ச்சி செய்துவிடலாம்: ஊசித் திசு ஆய்வு என்பது புற்று நோயின் பல வகைகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் ஓர் ஆய்வு முறையாகும். புற்று நோய் உயிரணுக்கள் இதன் மூலம் பரவுகிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
  • புற்றுநோய் உள்ள யாவரும் மருத்துவம் செய்துகொள்ள வேண்டும்: ஒருவர் மருத்துவருடன் ஆலோசனை செய்து வழிவகைகளை தெரிந்து கொண்டு செய்துகொள்ள வேண்டிய மருத்துவ முறையைத் தீர்மானித்துக் கொள்ளலாம். புற்று நோயுள்ள சிலருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் வெளித் தெரிவதில்லை. சிலர் இறுதி கட்டத்தில் இருக்கலாம். இவர்களுக்கு மருத்துவர் வலிகுறைக்கும் மருந்துகளை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.
  • புற்று நோய் எப்போதுமே வலிதரும் நோய்: சில வகை புற்று நோய்கள் முற்றிலுமாக வலி தருவதில்லை. இவ்வகை வலிகளை கட்டுப்படுத்த வேண்டியதின் தேவையை மருத்துவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நோயாளிகளின் அன்றாடக வாழ்க்கையில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வண்ணம் போலி மனநிறைவை அளிக்கும் மருத்துவ முறையை மருத்துவர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.
  • பெரும்பான்மையான மார்புக்கட்டிகள் புற்றுநோயே: பெரும்பான்மையான மார்புக் கட்டிகள் புற்று நோயல்ல என்றாலும் அவற்றை ஒரு மருத்துவர் கண்டிப்பாக ஆய்வு செய்ய வேண்டும். பெண்கள்  வெட்கப்படாமல் தாங்கள் காணும் மாற்றங்களைப் பற்றி கூறவேண்டும். ஏனெனில் மார்பகப் புற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது நல்லது. ஒரு கட்டி புற்றா அல்லவா என்பதைக் கண்டறிய உங்கள் மருத்துவர் மார்பு ஊடுகதிர்பட சோதனை, கேளா ஒலி சோதனை, திசு ஆய்வு ஆகியவற்றில் ஒன்றைப் பரிந்துரைக்கலாம்.
  • மாற்று மார்பகம் புற்று நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும்: மாற்று மார்பகம் பொருத்திக் கொண்டவர்களுக்கு மார்பகப் புற்று ஏற்படும் ஆபத்து ஒன்றும் பெரிய அளவில் இல்லை. மார்பகத் திசுக்களை ஆராயத் தரமான மார்பக ஊடுகதிர்ப்பட ஆய்வும் சிறந்த பலனை அளிப்பதில்லை. முற்றிலும் ஆராய சில வேளைகளில் X-கதிரும் கூடுதலாகத் தேவைப்படும்.
  • மார்பக ஊடுகதிர்ப்பட ஆய்வுமுடிவு எதிர்மறையாக (negative mammography) இருந்தால் புற்றுநோயைப் பற்றி கவலைப்படத் தேவை இல்லை: புற்று நோயை உணர்வதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் முன்னரே மார்பக ஊடுகதிர்ப்படம் புற்றுநோயைப் பெரும்பாலும் கண்டறிந்து விடுகிறது. இருந்தாலும் மார்பக ஊடுகதிர்ப்படம் 80-90% புற்று நோயையே கண்டுபிடிக்கிறது. 10-20% புற்று நோய்கள் கண்டறியப்பட முடிவதில்லை.
  • நாம் புற்று நோயைப் பற்றிப் பேச வேண்டியதில்லை: புற்று நோய் எளிதாகப் பேசிவிடக் கூடிய ஒன்றல்ல; அதிலும் குறிப்பாக நீங்கள் என்ன பேச வேண்டும் என்றும் பிறர் எப்படி பதிலளிப்பார் என்றும் அறியாத நிலையில். புற்று நோயைப் பற்றி வாழ்க்கைத் துணையோடும், குடும்ப உறுப்பினர்களோடும், நண்பர்களோடும், சக ஊழியர்களோடும் பேசும்போது உணர்வுகளை இலகுவாக்கலாம். அதே நேரத்தில் நோயை வெளிப்படையாகக் கையாளுவது விளைவுகளை மேம்படுத்தும். உங்கள் மனப்பாரமும் குறையும்.
  • புற்று நோயை மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது: இது விலக்கப்பட வேண்டிய கட்டுக்கதையே. தகுந்த நேரத்தில் புற்று நோயைக் கண்டுபிடித்துவிட்டால் நம்மால் செய்யக்கூடியவை ஏராளமாக இருக்கின்றன. சரியான முறைகள் மூலம் பரவலாக உள்ள புற்று நோய்களில் மூன்றில் ஒரு பங்கைத் தடுத்துவிட முடியும்.
  • புற்று நோய்க்கு நோய்க்குறிகளோ அறிகுறிகளோ கிடையாது: எல்லாவிதமான புற்று நோய்களுக்கும் ஆரம்ப நோய்க்குறிகளோ அறிகுறிகளோ அறியப்படவில்லை என்பது உண்மையே. ஆனால், மார்பக, கர்ப்பப்பைவாய், தோல், வாய், பெருங்குடல்மலக்குடல் புற்று நோய்கள், சில குழந்தைப்பருவப் புற்றுநோய்கள் போன்ற பெரும்பாலான புற்று நோய்களுக்குத் தொடக்கநிலையில் நோய்கண்டறிதலின் பயன்கள் மறுக்க முடியாதவைகளே. விழிப்புணர்வே ஆரம்ப கட்ட நோய் கண்டறிதலுக்கு முதல் படியாகும். தனிமனிதர்களும், சுகாதார நிபுணர்களும், கொள்கைகளை உருவாக்குபவர்களும் புற்று நோயின் அறிகுறிகளையும் நோய்க்குறிகளையும் பற்றிய விழிப்புணர்வும் அறிவும் பெறுவது முக்கியமாகும்.

குறிப்புகள்:
www.worldcancerday.org
www.mayoclinic.org

  • PUBLISHED DATE : Apr 21, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.