சிக்கா வைரஸ் நோய் தற்போது வெளிப்பட்டு வரும், கொசுவால் பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். தொற்றுக் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒரு ஏடிஸ் வகைக் கொசு கடிக்கும் போது நோய் பரவுகிறது. 1947-ல் உகண்டாவின் சிக்கா காட்டில் ரீசஸ் குரங்குகளில் இந்த வைரஸ் முதன் முறையாகக் கண்டறியப்பட்டது. 1952-ல் ஊனீர் சோதனைகள் மூலம் உகண்டாவிலும், டான்சீனியா ஐக்கியக் குடியரசிலும் மனிதர்களிலும் இவ்வைரசு கண்டறியப்பட்டது. 1968-ல் மனித மாதிரிகளில் இருந்து நைஜீரியாவில் வைரசு தனிமைப்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் சிக்கா வைரஸ் திடீரெழுச்சிகள் பதியப்பட்டுள்ளன.
2007-ல் மைக்ரோனேசியாவின் கூட்டமைப்பு நாடுகளில் சிக்கா வைரசின் திடீர் நோயெழுச்சியைத் தெற்கு பசிபிக் பகுதி பதிந்துள்ளது. அக்டோபர் 2013-ல் பிரஞ்சு பாலிநீசியா தன் முதல் திடீர் நோயெழுச்சியை அறிவித்தது.
மே 2015-ல் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் சிக்கா வைரசின் பரவலை பிரேசில் நாட்டின் பொது சுகாதார அதிகாரிகள் உறுதி செய்தனர். அக்டோபர் 2015-ல் இருந்து பிற நாடுகளும் அமெரிக்காவின் பல பகுதிகளும் சிக்கா வைரசின் இருப்பை அறிவித்திருக்கின்றன.
சிக்கா வைரஸ் தொற்றுடன் இணைந்து, சிறுதலை நேர்வுகளும் (குழந்தை சிறுதலையோடு பிறத்தல் அல்லது பிறந்த பின் தலை வளர்ச்சி அடையாமல் இருப்பது) பிற நரம்பியல் கோளாறுகளும் (குயில்லன் பார்ரே நோய்த்தாக்கம்- (GBS)) பிரேசிலிலும், அதே போன்ற ஒரு தொகுதியான நிகழ்வுகள் பிரஞ்சு பாலிநேசியாவிலும் 2014-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டன.
கருவுற்ற காலத்தில் ஏற்படும் சிக்கா வைரஸ் தொற்றுக்கும் சிறுதலைக்கும் இடையில் இருக்கும் தொடர்பு தற்செயலானது என்று உலக சுகாதார நிறுவனம் உறுதியாகச் சந்தேகப்படுவதோடு, இவற்றிற்கு இடையில் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கண்டறியவும் ஆய்வு மேற்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது. சிக்கா வைரசையும் சிறுதலை அல்லது குயில்லன் – பர்ரே நோய்த்தாக்கத்தையும் (GBS) இணைத்து எந்த ஒரு அறிவியல் சான்றுகளும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்காவின் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நரம்பியல் நோய்க்கோளாறுகளின் தொகுதியும் பிறந்த குழந்தை உருக்குலைவுகளும் உலகக் கவனத்தை ஈர்க்கக் கூடியப் பொது சுகாதார அவசரநிலையை உருவாக்கியுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் (உ.சு.நி) 2016 பெப்ருவரி முதலாம் நாள் அறிவித்துள்ளது.
2007 முதல் சிக்கா வைரஸ் பரவல் 46 நாடுகளிலும், பகுதிகளிலும் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் 34 நாடுகளில் உள் நாட்டுப் பரவலாக 2015-16 காலகட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆறு நாடுகளில் வைரல் சுற்று அறிகுறிகளாகவும், ஐந்து நாடுகளில் சிக்கா வைரஸ் திடீரெழுச்சி முடிந்து விட்டதாகவும், ஒரு நாட்டில் நோய்பரப்பி அற்ற பரவலாக உள் நாட்டிலேயே பெற்ற ஒரு நேர்வும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன (12 பெப்ருவரி 2016)*.
மேலும் விவரங்களைக் காண-
சிக்கா வைரஸ் பற்றிய கேள்வி பதில்-
www.nhp.gov.in/Zika-virus
who.int/features/qa/zika/en/
www.who.int/features/qa/
சிக்கா வைரசுக்கான தேசிய வழிகாட்டுதல்கள் - http://www.mohfw.nic.in/index
(அ) சிக்கா வைரஸ் பற்றிய வழிகாட்டுதல்கள் - http://www.mohfw.nic.in/
(ஆ) ஏடிஸ் கொசுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நோய்பரப்பி கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் - http://www.mohfw.nic.in/
(இ) செய்யக் கூடியவையும் கூடாதவையும் - http://www.mohfw.nic.in/
(உ) சிக்கா வைரசுக்கான பயண ஆலோசனை - http://www.mohfw.nic.in/
(ஊ) சிக்கா வைரஸ் பற்றிய உண்மை நிலவர அறிக்கை (3 பெப்ரவரி 2016 வரை மேம்படுத்தப்பட்டது)- http://www.mohfw.nic.in/
(ஊ) சிக்கா வைரசை ஆய்வகத்தில் கண்டறிதலும் வழிகாட்டுதல்களும் - http://www.mohfw.nic.in/
ஆய்வகக் கண்டறிதலுக்கான சிக்க வைரஸ் குறிப்புப் படிவம் (என்.ஐ.வி., புனே) - niv.co.in/Zika_viral_disease_CRF.pdf
Zika Outbreak: WHO's Global Emergency Response Plan
குறிப்புகள்-
http://www.wpro.who.int/mediacentre/factsheets/fs
http://www.who.int/mediacentre/factsheets/
http://www.who.int/mediacentre/news/statements/2016/
http://www.who.int/emergencies/zika-virus/situation-report
http://www.who.int/emergencies/zika-virus/situation-report/ (15th February 2016 அன்று அணுகப்பட்டது)*
சிக்கா வைரசால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையோருக்கு எந்தவித அறிகுறியும் இருக்காது (80% வரை). அல்லது டெங்கு போன்ற கணுக்காலிகளால் பரவும் வைரஸ் தொற்று போல அறிகுறிகள் இருக்கும். இவற்றில் காய்ச்சல், தோல் சொறி, வெண்படல அழற்சி, தசை மற்றும் மூட்டு வலி, சோர்வு, தலைவலி போன்றவை அடங்கும்.
இந்த அறிகுறிகள் இலேசாக 2-7 நாட்கள் வரை இருக்கும்.
சிக்கா வைரசின் நோயரும்பும் காலம் சரிவரத் தெரியவில்லை. ஆனால் சில நாட்களாக இருக்கலாம்.
டெங்குவோடு ஒப்பிடும் போது, சிக்கா வைரஸ் தொற்று மருத்துவ ரீதியாக இலேசானதில் இருந்து மிதமானதாக இருக்கும். காய்ச்சல் கடுமையாகத் தோன்றி குறுகிய காலம் நீடிக்கும்.
பிரஞ்சு பாலிநேசியாவிலும் பிரேசிலிலும் முறையே 2013-2104 மற்றும் 2015-ல் நிகழ்ந்த சிக்கா திடீரெழுச்சியில் குயில்லன் – பர்ரே நோய்த்தாக்கத்திலும் a (GBS) சிறுதலையுடன் b பிறப்பதிலும் பொதுமக்களிடையில் அதிக நேர்வுகள் அறிவிக்கப்பட்டன. மருத்துவ வல்லுநர்கள் சிக்கா வைரஸ் தொற்றுடன் GBS மற்றும் சிறுதலைப் பிறப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப் பட்டனர். ஆனால் அறிவியல் அடிப்படையில் எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை*.
(a. குயிலன் – பர்ரே நோய்த்தாக்கம் – உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியைத் தாக்கும் நிலை. இது பல வைரசுகளால் உண்டாகிறது. இது எந்த வயதினரையும் பாதிக்கலாம். முக்கிய அறிகுறிகள் தசை பலகீனமும் கையிலும் காலிலும் கூச்ச உணர்வும் ஆகும். மூச்சு மண்டல தசைகள் பாதிக்கப்பட்டால் கடுமையான சிக்கல்கள் ஏற்படும்).
(b. சிறுதலை – குழந்தைகள் சிறிய தலைகளோடு பிறப்பது அல்லது பிறப்புக்குப் பின் தலை வளராமல் இருப்பது
குறிப்புகள்:
www.who.int/csr/disease/zika/en/
www.who.int/mediacentre/news/statements/2016/
www.who.int/features/qa/zika/en/
www.who.int/emergencies/zika-virus/situation-report/who-zika-situation- (15th பெப்ருவரி 2016 அன்று அணுகப்பட்டது)*
சிக்கா வைரஸ் கொசு மூலம் பரவும் ஃபிளேவிவைரஸ்; டெங்கு வைரசை மிகவும் ஒத்தது.
பரவல்-
நோய்பரப்பி – வைரசால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு கொசு கடிக்கும் போது சிக்கா வைரஸ் மனிதருக்குப் பரவுகிறது. வெப்ப மண்டலத்திலும் சார் வெப்ப மண்டலத்திலும் பொதுவாக ஏடிஸ் ஏஜிப்தி வகைக் கொசுவால் நோய் ஏற்படுகிறது. இதே கொசுதான் டெங்கு, சிக்கன்குனியா மற்றும் மஞ்சள் காய்ச்சலைப் பரப்புகிறது.
ஏடிஸ் கொசுவின் பிற சிற்றினங்களான ஏ.அல்போபிக்டஸ், ஏ.ஹென்சிலி, ஏ,பாலிநெஸின்சிஸ் ஆகியவையும் சிக்கா வைரஸ் பரப்பிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இரத்த மாற்றம், பிறப்பு சார், பாலியல் பரவல்களும் மனிதர்களில் ஏற்பட்டுள்ளதாகச் சில சான்றுகள் உணர்த்துகின்றன.
ஏடிஸ் கொசு பற்றிய சில உண்மைகள்-
குறிப்புகள்:
www.who.int/csr/disease/zika/en/
நோய் உண்டாவதற்கு இரு வாரங்களுக்கு முன் நோய்ப்பரவல் உள்ள இடங்களுக்கு சென்று வந்தோரில், கடுமையான காய்ச்சல், வெண்கொப்புளச் சொறி, மூட்டுவலி உள்ளவர்களுக்கு சிக்கா வைரஸ் நோயை சந்தேகிக்கலாம்.
தலைகீழ் படியெடுப்பு பாலிமரேஸ் தொடர் வினை மற்றும் இரத்த மாதிரிகளில் இருந்து வைரசைத் தனிமைபடுத்தல் (ஆய்வுக்காக) ஆகியவற்றின் மூலம் சிக்கா வைரஸ் கண்டறியப்படுகிறது. அறிகுறி தோன்றி 3-5 நாட்களுக்குப் பிறகு சேகரிக்கப்பட்ட எச்சில் அல்லது சிறுநீர் மாதிரிகளில் இருந்தும் அல்லது நோய் ஏற்பட்டதில் இருந்து முதல் 1-3 நாட்களில் சேகரிக்கப்பட்ட ஊனீரில் இருந்தும் நோய்காணல் இம்முறையில் நிகழ்த்தப்படுகிறது.
ஊனீர் சோதனைகள் (நோய்த்தடுப்பு ஒளிர்தல் மதிப்பீடுகள் மற்றும் நொதி-இணைந்த நோய்த்தடுப்பு உறிஞ்சல் மதிப்பீடுகள்) எதிர்-சிக்கா வைரஸ் IgM மற்றும் IgG எதிர்பொருட்கள் இருப்பதைக் காட்டலாம். ஊனீரியல் மூலம் கண்டறிதல் கடினமாகும். ஏனெனில், டெங்கு, மேற்கு நைல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுத்தும் பிற ஃபிளாவிவைரசுகளுடன் இவ்வைரஸ் எதிர்வினைகளை உருவாக்கக் கூடும்.
இந்தியாவில், தில்லியில் உள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையமும் (NCDC), புனேயில் உள்ள தேசிய வைரலியல் நிறுவனமும் (NIV) கடுமையான காய்ச்சல் நிலையிலேயே சிக்கா வைரஸ் நோயை ஆய்வகத்தில் கண்டறியும் திறன் கொண்டவை. திடீர் நோயெழுச்சி ஆய்வுகளுக்குத் துணை நிற்பதும், ஆய்வகச் சோதனைகளை உறுதிப்படுத்துவதுமான இவ்விரு நிறுவனங்களே உச்சநிலை ஆய்வகங்களாகும். இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவால் இன்னும் பத்து கூடுதல் ஆய்வகங்கள் ஆய்வகச் சோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வலிமைப்படுத்தப்படும்.
குறிப்புகள்
சிக்கா வைரசுக்கு எதிர்வைரல் மருத்துவம் எதுவும் இல்லை. மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து இதைவிட கடுமையான மலேரியா, டெங்கு மற்றும் பாக்டீரியா தொற்று எதுவுமில்லை என்று தெரிந்து கொண்ட பின் அறிகுறிகளுக்கான சிகிச்சையை அளிக்க வேண்டும். சிக்கா வைரஸ் தொற்றில் இருந்து டெங்குவைப் பிரித்து அறிவது முக்கியமாகும். ஏனெனில் சில டெங்கு நேர்வுகளில் கடுமையான சிக்கல்கள் இருக்கலாம். மேலும் சிக்கா மற்றும் டெங்குத் தொற்றுக்கள் இணைந்தும் ஏற்படக் கூடும்.
அறிகுறிகளின் அடிப்படையில் அசெட்டாமினோபென் அல்லது பாரசெட்டமால் மூலம் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெண்கொப்புளச் சொறியால் ஏற்படும் அரிப்பை ஆன்டிஹிஸ்ட்டமினிக் மருந்துகளால் குறைக்கலாம்.
(ஆஸ்பரின் மற்றும் பிற ஊக்கமருந்து அல்லாத எதிர்-அழற்சி மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் மருத்துவ அறிகுறிகளின் காரணம் டெங்கு அல்லது சிக்கன்குனியாவாக இருக்கலாம். இவற்றிற்கு பிற ஊக்கமருந்து அல்லாத எதிர்-அழற்சி மருந்துகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம்).
சிக்கா வைரஸ் நோயாளிகளுக்கு ஓய்வும் அதிக அளவில் நீராகாரமும் எடுக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.
நோயாளியைத் தனிமைப்படுத்துதல்:
நோயாளி, வலை (பூச்சிக்கொல்லி பூசியது அல்லது பூசப்படாதது) இடப்பட்ட படுக்கையைப் பயன்படுத்த வேண்டும் அல்லது ஜன்னல் திரைகள் இறுக்கமாக உள்ள இடத்தில் தங்க வேண்டும். இதன் மூலம் நோயாளியை நோயின் முதல் வாரத்தில் கொசு கடிக்காமலும் தொற்று மேலும் பிறருக்குப் பரவாமலும் தடுக்கலாம்.
சிக்கா வைரஸ் நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்களும் பராமரிப்பு அளிப்பவர்களும் கொசுக் கடியைத் தவிர்க்கப் பூச்சிவிரட்டியையும் கைகால்களை மூடும் நீண்ட ஆடைகளையும் அணிய வேண்டும்.
பிறந்த குழந்தைகளையும், பிறவி குறைபாடுடன் பிறந்த குழந்தைகளையும் நரம்பியல் கோளாறுகள் உள்ளனவா என்று கண்காணிக்க வேண்டும்.
தற்போது தடுப்பு மருந்தும் எதுவும் இல்லை.
குறிப்புகள்:
www.who.int/csr/disease/zika/en/
www.paho.org/hq/index.php (15th பெப்ருவரி 2016 அன்று அணுகப்பட்டது.)*
சாத்தியமான சிக்கல்கள்
முறையே 2013 மற்றும் 2015-ல் பிரஞ்சு பாலிநேசியாவிலும் பிரேசிலிலும் ஏற்பட்ட பெரும் திடீர் நோயெழுச்சிகளில் சிக்கா வைரஸ் நோயின் சாத்தியமான நரம்பியல் மற்றும் தன்தடுப்பு சிக்கல்கள் (குலன் பர்ரே நோய்த்தாக்கம்) பொதுமக்களிடம் ஏற்பட்டதாகத் தேசிய சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.
கருவுற்ற காலத்தில் ஏற்படும் சிக்கா வைரஸ் தொற்றுக்கும் குழந்தைகள் சிறுதலையுடன் பிறப்பது அதிகரித்துள்ளதற்கும் இடையில் இருக்கும் தொடர்பு தற்செயல் ஆனது என்று உ.சு.நி. வல்லுநர்கள் உறுதியாக சந்தேகித்தனர். இருப்பினும் சிக்கா வைரஸ் நோய்க்கும் சிறுதலைக்கும் இடையில் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள அதிகமான அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
குறிப்புகள்:
கொசுக்களும் அவை பெருகும் இடங்களும் சிக்கா வைரஸ் தொற்றுக்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாக இருக்கின்றன. பெருகும் இடங்களைக் குறைப்பதும் (பெருகும் இடங்களை அகற்றுதல் அல்லது மாற்றி அமைத்தல்) மக்களுக்கும் கொசுக்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைக் குறைத்தலும் ஆகிய நடவடிக்கைகளிலேயே தடுப்பும் கட்டுப்படும் அடங்கியுள்ளன.
சுகாதாரச் சேவைகளின் பொது இயக்ககம் (DGHS), சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம், இந்திய அரசு, சிக்கா வைரசைத் தடுப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது, (www.mohfw.nic.in/ )
சிக்கா வைரசைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதில் அடங்கியுள்ளவை:
1. கண்காணிப்பை அதிகரித்தல்-
(i) சமுதாய அடிப்படையில் கண்காணிப்பு- முதன்மை நோய் நேர்வு மற்றும் குலியன் பர்ரே நோய்த்தாக்கம் ஆகியவற்றைக் கண்டறிய ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் (IDSP) மூலம் சமுதாய அளவில் கண்காணிப்பை அதிகரிக்க சுகாதாரச் சேவைகளின் பொது இயக்ககம் (DGHS) பரிந்துரைத்துள்ளது. பிறந்த குழந்தைகளில் சிறுதலை இருப்பதை இணைத்துக் கண்காணிக்க தாய்-சேய் நலப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(ii) அனைத்துலக விமானநிலையங்கள்/துறைமுகங்கள்- எல்லா அனைத்துலக விமானநிலையங்கள்/துறைமுகங்கள் அதிகார அமைப்புகளுக்கும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வருவோரையும், காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்காணிக்கும் படியாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ள விமான தொற்றுநீக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் படியாகவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
(iii) துரித பதில்வினை குழுக்களின் செயலூக்கம் (RRTs)- சந்தேகத்திற்குரிய நோயெழுச்சிகளை ஆய்வு செய்ய RRT களை அனைத்து மட்டங்களிலும் செயலூக்கப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதியில் நோயெழுச்சி ஏற்பட்டாலும் அதை ஆய்வுசெய்ய, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு ஆணையம் (NCDC), தில்லி, தொடர்பு முகாமையகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(iv) ஆய்வகக் கண்டறிதல் – நோயெழுச்சி கண்டறிதலுக்குத் துணை செய்யவும் ஆய்வக முடிவுகளை உறுதி செய்யவும் உச்ச ஆய்வகங்களாக தேசிய நோய்க்கட்டுப்பாட்டு ஆணையமும் (NCDC) (தில்லி), தேசிய வைரலியல் பேரவை நிறுவனமும் (NIV) திகழ்கின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிப் (ICMR) நாட்டின் பத்து கூடுதல் ஆய்வகங்களை வலுப்படுத்தும்.
2. ஆபத்தைப் பற்றிய அறிவுறுத்தல்- மகப்பேறு, குழந்தை, நரம்பியல் நிபுணர்களை உள்ளடக்கிய மருத்துவர்களிடம் சிக்கா வைரசைப் பற்றியும் மகப்பேற்றில் அதன் எதிர்மறையான விளைவுகளைப் பற்றியும் (கரு இழப்பு, சிறு தலை) அதிகமான விழிப்புணர்வை மாநில/யூனியன் பிரதேச நிர்வாகங்கள் ஏற்படுத்த வேண்டும். அரசு சாரா அமைப்புகளிடமும் சிக்கா வைரஸ் பற்றிய உணர்வை உண்டாக்க வேண்டும்.
3. நோய்பரப்பியைக் கட்டுப்படுத்துதல்- நோய்பரப்பி மூலம் பரவும் நோய்களான டெங்கு, சிக்கன்குனியா, சிக்கா போன்றவற்றின் பரவலைத் தடுக்கக் கொசுவைக் கட்டுப்படுத்துவதே ஒரே நடவடிக்கை ஆகும். இதை ஒருங்கிணைந்த நோய்பரப்பி மேலாண்மை மூலமாகவே நிறைவேற்ற முடியும் (IVM).
ஒருங்கிணைந்த நோய்பரப்பி மேலாண்மையில் அடங்குவன (IVM):
(அ) நோய்பரப்பி கண்காணிப்பு – ஏடிஸ் கொசுப் பெருக்கத்தைக் ஆரம்பத்தில் கண்டறிந்து தகுந்த கட்டுப்பாட்டு முறைகளைத் தொடங்க முட்டைப்புழு மற்றும் முதிர்கொசுக்களை கண்காணித்து வருவது முக்கியமானதாகும்.
(ஆ) நோய்பரப்பி கட்டுப்பாடு – கொசு பெருக்கத்தையும் முதிர்கொசுக்களையும் அழிப்பது இதில் அடங்கும். அவைகளாவன:-
(i) சூழலியல் கட்டுப்பாடு: ஏடிஸ் கொசுக்களின் முதிராப் பருவத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளைச் சுற்றி முட்டைப்புழுக்கள் உருவாகும் அல்லது உருவாகக் கூடிய இடங்களைத் தீவிரமாகக் குறைக்க வேண்டும்:
(ii) உயிரியல் கட்டுப்பாடு-
(iii) வேதியல் கட்டுப்பாடு-
(இ) தனிநபர் பாதுகாப்பு/தடுப்பு நடவடிக்கைகள்-
(ஈ) சட்ட நடவடிக்கைகள்-பல மட்டங்களில் கொசு பெருகுவதற்கு வாய்ப்புள்ள இடங்களைத் தவிர்ப்பதற்கான சட்டம் அல்லது துணைச்சட்டங்களை இயற்ற வேண்டும்.
(உ) சமுதாயத் திரட்டலுக்கும் குழுக்களை ஒன்று குவிக்கவும் சுகாதாரக் கல்வி-
ஏடிஸ் உற்பத்தி ஆகும் இடங்களை ஒழிக்க சமுதாயமும் பிற துறைகள்/பிரிவுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.
4. பயண ஆலோசனை-
கர்ப்பிணிகள் மற்றும் கர்ப்பமுறத் திட்டமிடும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய காப்புமுறைகள் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள்-
(உ.சு.நி. இதுவரையில் எந்தப் பயண அல்லது வணிகத் தடைகளையும் பரிந்துரைக்கவில்லை.)
5. உலக முகவாண்மையங்களுடன் ஒத்துழைப்பு – உலக சுகாதார ஒழுங்குமுறைகளின் குவிமையமான தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையம் (NCDC), தில்லி, பாதிக்கப்பட்ட நாடுகளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் அவற்றிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும் மற்றும் உ.சு.நி.விடம் உருவாகிவரும் கொள்ளைநோய் குறித்த அன்றாடகத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் அதிகாரப்படுத்தப் பட்டுள்ளது.
6. ஆராய்ச்சி- இந்தியாவில், இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பு மருந்து – தற்போது சிக்கா வைரசைத் தடுக்கும் எந்தத் தடுப்பு மருந்தும் இல்லை. உ.சு.நி. தகவல்படி ஏறத்தாழ 15 மருந்து நிறுவனங்கள் இதை நோக்கிய பணிகளைத் தொடங்கி விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஒரு டி.என்.ஏ. தடுப்பு மருந்தும், இந்தியாவின் பாரத் பயோடெக்கின் ஒரு செயலிழப்புச் செய்யப்பட்ட மருந்தும் வளர்ச்சி பெற்ற நிலையில் உள்ளன. வேறு தடுப்பு மருந்துகளின் பெரிய அளவிலான சோதனைகளுக்கு இன்னும் குறைந்தது 18 மாதங்கள் ஆகலாம்.*
7. கண்காணிப்பு – சுகாதார சேவையின் பொது இயக்ககத்தின் கீழ் இணை கண்காணிப்புக் குழு தொடர்ந்து சூழ்நிலையைக் கண்காணித்து வருகிறது.
முக்கிய செய்தி.
கொசுக் கடியில் இருந்து காத்துக் கொள்ளுவதே சிறந்தத் தடுப்பு முறை.
குறிப்புகள்-
www.who.int/csr/disease/zika/information-for-travelers/
www.who.int/emergencies/zika-virus/situation-report (15th பெப்ருவரி 2016 அன்று அணுகப்பட்டது)*