பார்வைக் குறைவும் பார்வைக் கருவிகளும்

பார்வை என்பது ஒரு தனித்துவமான புலனுணர்வு ஆகும்.  ஒரு பொருளின் தோற்ற அமைப்பை உருவாக்கும் தன்மைகளை (நிறம், ஒளிர்தல், வடிவம், அளவு போன்றவை) இதன் வழியாக அறிய முடிகிறது. கண்ணுக்குள் நுழையும் ஒளிக் கதிர்கள் விழித்திரையால் மின் சமிக்கைகளாக மாற்றப்பட்டு கண்நரம்பால் மூளைக்குக் கடத்தப்படும் செயல்முறையின் மூலமாக இது நடைபெறுகிறது.

பார்வைக் கூர்மை என்பது பார்வை செயலமைவின் பிரிதிறன் அளவாகும். இது பொதுவாக ஒரு வரைபடம் மூலமாக அளக்கப்படுகிறது. உ-ம்: ஸ்நெல்லன் வரைபடம். பொதுவான ஒரு ஸ்நெல்லன் வரைபடத்தில் ஏழு வரி கருப்பு எழுத்துக்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஸ்நெல்லன் வரைபடம் மூலம் பார்வைக் கூர்மையை அளக்கும் போது வரைபடத்தில் இருந்து சோதிக்கப்படுபவர் 6 மீட்டர் தொலைவில் அமர்ந்திருப்பார். இந்த வரைபடத்தில் உள்ள எழுத்துக்கள் அளவில் குறைந்து வரும் வண்ணம் வரிவரியாக அமைந்திருக்கும். முதல் வரியில் இருக்கும் ஒரே எழுத்தை 60 மீட்டர் தொலைவில் இருந்து படிக்கலாம். 6 ஐத் தொகுதியாகவும் (நோயாளி அமர்ந்திருக்கும் தொலைவு) நோயாளியால் வாசிக்கக் கூடிய  மிகக் குறைந்த அளவைப் பகுதியாகவும் கொண்ட விகிதமாகப் பார்வைக் கூர்மை பதிவு செய்யப்படும். உதாரணமாக, ஒரு பார்வைப் பதிவு 6/60 ஆக இருந்தால் 6 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு நோயாளியால் மேல் வரியை மட்டுமே படிக்க முடியும். பொதுவாக இதை 60 மீட்டர் தூரத்தில் இருந்து படிக்க முடியும். தூரத்தை அடியாகக் கூட அளக்கலாம்.  6 மீட்டர் என்பது 20 அடி ஆகவே பார்வை மீட்டரில் 6/6 ஆக இருந்தால் அடி அளவில் அது 20/20 ஆகும். இதுபோலவே 6/60 மீட்டர் என்றால் 20/200 அடி என்று பொருள்.

பார்வைக் கூர்மையை மதிப்பிட ஸ்நெல்லன் மாதிரி வரைபடம்: விக்கிப்பீடியா படம்  (Typical Snellen Chart to estimate visual acuity: Image in Wikipedia)  

பார்வைக் குறைவு வருமாறு வரையறுக்கப்படுகிறது: ‘கூடுதல் பார்வையுள்ள கண்ணில் பார்வைக் கூர்மை 6/18-ல் இருந்து 3/60-ஐ உள்ளடக்கியது வரை’.  ‘மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் , காட்சிக் கருவிகளின் துணை கொண்டும் கூடுதல் பார்வையுள்ள கண்ணில் ஒருவருக்குப் பார்வைக் கூர்மை <6/18 க்குக் குறைவாகவும், ஒளிப்புலனுணர்வு அல்லது நடுபார்வைப்புலம் <20 டிகிரியாகவும் இருக்க, ஆனால் அவர் தமது பார்வையை ஒரு பணியைத் திட்டமிட்டு முடிக்கப் பயன்படுத்த ஆற்றல்  உடையவாராக இருக்கும் போது அவர் பார்வைக் குறைவுள்ளவராவார்’. ஆகவே குறைந்த பார்வை என்பது மரபு ரீதியான கண்ணாடிகளால் முற்றிலும் சரி செய்ய முடியாத குறைப்பார்வையையே குறிக்கும். நோய்களைப் பற்றிய உலகளாவிய வகைப்பாட்டின் 10 வது திருத்தத்தில் (ICD-10 பதிப்பு: 2015) குறைப்பார்வை என்ற சொல்லுக்குப் பதில், அனைத்துக் காரணங்களினாலும் ஏற்படும்  பார்வைக் குறைபாடுகள், “மிதமான பார்வைக் கோளாறு (பார்வைக் கூர்மை <6/18 – 6/60)” என்றும் “கடுமையான பார்வைக் கோளாறு என்றும் (பார்வைக் கூர்மை <6/60 – 3/60) விளக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனமும், பார்வையிழப்பைத் தடுக்கும் உலக முகவாண்மையமும் பங்குதாரராக இணைந்து ’தரிசனம் 2020: பார்வை ஓர் உரிமை” என்பதை 1999-ல் தொடங்கியது. 2020-க்குள் தவிர்க்கக் கூடிய பார்வையிழப்பை ஒழிப்பதும், 1990-2020 கால கட்டத்தில் இருமடங்காகும் என  கணிக்கப்பட்ட தவிர்க்கக் கூடிய பார்வைக் கோளாறுகளைத் தடுப்பதும் இதன் இரட்டை இலக்காகும். தரிசனம் 2020 குறைப் பார்வை சேவைகளைப் பற்றிய  விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இன்னும் மிஞ்சி இருக்கும் பார்வையைப் பயன்படுத்தவும் கருவிகள் மூலம் அதை அதிகரிக்கவும் அத்தகையோருக்குச் சேவை செய்ய குறைப் பார்வைச் சேவை ஈடுபடுகிறது. அதிகத் தரம் வாய்ந்த, விலை குறைந்த குறைப் பார்வைக் கருவிகளை அனைத்துப் பகுதிகளுக்கும் விநியோகிக்க சீனாவின் ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப்பகுதியில் ஒரு குறைப் பார்வை மையம் இயங்கி வருகிறது.

குறிப்புகள்

http:www.who.int/blindness/vision2020_report.pdf

www.aoa.org

www.kellogg.umich.edu

www.eschenbach.com

www.visionaware.org

www.geteyesmart.com

Abrams David. Duke-Elder’s Practice of Refraction. Tenth Edition. New Delhi: B.I.Churchill Livingstone Pvt.Ltd., 1993.

குறைப் பார்வையின் அறிகுறிகள்: சிறந்த மருத்துவ, அறுவை மற்றும் கருவிகளினால் சரிசெய்த பின்னரும் கீழ்க்காண்பவை இருந்தால்:

  • தூரத்தில் இருக்கும் பொருட்களை இனங்காணுவதில் சிரமம்
  • படிப்பது அல்லது நுண்வேலைகளைச் செய்வதில் சிரமம்
  • நிறங்களை வேறு படுத்தி அறிவதில் சிரமம்

குறை பார்வைக்கான காரணங்கள்:

  1. வயதோடு தொடர்புடைய விழிமையச் சிதைவு – விழித்திரையில் காணப்படும் விழி மையம் பாதிக்கப்படுவதால் பார்வைத் திறன் மங்கும்.
  2. கூடிய கிட்டப்பார்வை போன்ற ஒளிவிலகல் பிழைகள்
  3. மாறுகண்ணால் தெளிவற்ற பார்வை
  4. கண்புரை – விழியாடி மறைக்கப்படுவதால் பார்வை குறைதல். அறுவை சிகிச்சையால் குணப்படுத்த முடிந்தாலும் கண் நோய் உள்ள சிலருக்கு குறைப் பார்வைக் கருவிகளால் பயன் கிடைக்கும்.
  5. நீரிழிவு விழித்திரைநோய் – நீரிழிவு நோயால் விழித்திரைக்கு உயிர்வளி குறைவாகக் கிடைப்பதால் இரத்தக்குழாய் மாற்றங்கள் ஏற்பட்டு சிதைவுகளும் கசிவுகளும் உண்டாகும். விழிமையத்தில் உண்டாகும் இம்மாற்றங்களால் பார்வை குறையலாம்.
  6. கண்ணழுத்த நோய் – கண்ணுக்குள் ஏற்படும் அழுத்தத்தால் கண் நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை குன்றலாம்.
  7. விழித்திரை விடுபடல் – கீழடுக்கில் இருந்து தனியாக