Hg யில் 140 மி.மீட்டரையும் (உயர் அழுத்தம்) 90 மி.மீட்டரையும் (குறை அழுத்தம்) இரத்த அழுத்த அளவுகள் கடந்தால் அது இரத்த மிகை அழுத்தம் எனக் கருதப்படும். இந்த அளவுகளுக்கு, ஏற்படும் இதய நேர்வுகள், நீரிழிவு அல்லது உறுப்புச் சிதைவைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். Hg யில் 160/100 மி.மீ. மேற்பட்ட இரத்த அழுத்தம் கொண்ட அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீங்கிழைக்கும் மிகையழுத்தம் என்பது கடுமையான இரத்த அழுத்தமும் (Hg யில் 200 மி.மீ. மேலான உயரழுத்தமும் Hg யில் 130 மி.மீ. மேலான குறையழுத்தமும்) அதனோடு இணைந்த இருபுற விழித்திரை சிதைவும் விழி வீக்கமுடன் அல்லது இல்லாமல் உண்டாகும் கசிவும் ஆகும்.
மிகையழுத்த விழித்திரை நோயில், விழித்திரை நுண்குழல்கள் மிகையழுத்தத்தின் விளைவாக சுருக்கம் அடைகின்றன. இக்குறுகல், ஏற்கெனவே இருக்கும் உள்வளைவு விழிவெண்படல திசுத்தடிப்பின் விகிதத்தைப் பொறுத்தது. ஆகவே, இளம் வயதினரிடம் உண்மையான குறுகலையும் வயதானவர்களிடம் இரத்தக் குழாய்களின் விறைப்பின் காரணமாகக் குறைவான அளவில் குறுகலையும் காணலாம். தொடர்ந்து மிகையழுத்தம் இருந்தால் குருதி தக்கவைப்புத் திறனில் உண்டாகும் கோளாறினால் குருதிக்கசிவு ஏற்படும். மிகையழுத்த விழித்திரை நோயால் குறுகல் அம்சங்களும், உள்ளுருளும் வெண்படலத் திசுத்தடிப்பும், கசிவும் காணப்படும்.
குறிப்புகள்
http://emedicine.medscape.com/article/1201779-overview#a3
http://eyewiki.org/Hypertensive_retinopathy
http://en.excimerclinic.ru/retina/hypertensiveretinopathy
http://www.msdmanuals.com/professional/eye-disorders/retinal-disorders/hypertensive-retinopathy
Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.
Longmore Murray; Wilkinson Ian; Torok Estee. Oxford handbook of clinical medicine. Fifth Edition.UK. Oxford University Press, 2001.
பெரும்பாலான நோயாளிகளுக்கு அறிகுறிகள் காணப்படுவதில்லை.
தீங்கிழைக்கும் மிகையழுத்தம் உடையவர்களூக்குத் தலைவலி, கண்வலி அல்லது பார்வைக் குறைபாடு இருக்கும்.
உள்ளுருளும் வெண்படல திசுத்தடிப்பு எந்த அறிகுறிகளையும் காட்டாது. எனினும், பெரும் குழல்நெளிவு, இரத்தக்குழல் இடையூறு போன்ற வெண்படல திசுத்தடிப்பின் சிக்கல்களில் அறிகுறிகள் தோன்றும்.
நீடித்த மிகையழுத்தத்தால் தமனிச்சுவர் தடிப்பு ஏற்பட்டு இரத்தக்குழாய்களில் மாற்றம் உண்டாகிறது.
மிகையழுத்தம் முதனிலை அல்லது இன்றியமையாததாக இருக்கும். இதற்கு கண்டறியப்படக் கூடிய காரணங்கள் எதுவும் இல்லை.
இரண்டாம் நிலை மிகையழுத்தம் கீழ்வருவன போன்ற அடிப்படையான நோய்களால் ஏற்படும்:
- முதனிலை அல்டோஸ்டெரோன் மிகைப்பு
- கஷ்ஷிங் நோய்த்தாக்கம்
- அண்ணகச் சுரப்பி அகணிக்கட்டி
- சிறுநீரகக் குழல் நோய்
- பெருநாடி இறுக்கம்
- தைராயிடு மிகைச் சுரப்பு
- பாரா தைராயிடு மிகைப்பு
இன்றியமையா மிகையழுத்தம் ஏற்படக்கூடிய பெரும் ஆபத்து மிகையழுத்தக் கடுமையே. பொதுவான ஆபத்துக் காரணிகள் புகையிலை பயன்பாடு, மது, அதிக உப்பு உணவு, உடல் பருமன் மற்றும் மனவழுத்தம்.
தமனிச்சுவர் தடிப்புக்கு நோயின் கால அளவே முக்கியமான ஆபத்துக் காரணி ஆகும்.
மண்டலம்சார் இரத்த மிகையழுத்தம் இருப்பதைக் கொண்டும், கண்பாவையை விரிவாக்கி விழித்திரை பரிசோதனை செய்வதன் மூலமும் நோய் கண்டறியப்படுகிறது.
விழித்திரைப் பரிசோதனை:
காணப்படுபவை:
- இரத்தக் குழாய்ச் சுருக்கம்: இரத்தக் குழாய்கள் பொதுவாக அல்லது இடம்சார் சுருக்கம் அடையும். கடுமையான மிகை அழுத்தத்தால் நுண்தமனிகள் தடைபட்டு காட்டன் – ஊல் பகுதிகள் உருவாகும்.
- கசிவு: அசாதாரண குழல் ஊடுறுவல் விழித்திரை வீக்கம், பிழம்பு வடிவ இரத்தக்கசிவு, கடினக் கசிவு உருவாக்கம் ஆகியவற்றிற்கு வழிகோலுகிறது. கடினக் கசிவுகள் விழிப்புள்ளியைச் சுற்றிலும் தசை நட்சத்திரங்களாக அமையலாம். தீங்கிழைக்கும் மிகை அழுத்தத்தால் கண் நரம்புத் தலை வீக்கம் தகட்டு வீக்கமாகக் காணப்படலாம்.
- தமனிச்சுவர் தடிப்பு: இரத்தக் குழல் சுவர் தடிமனாகும். தமனி சிரை கடக்கும் இடத்தில் இந்தத் தடிமன் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உருவாக்கும்.
மிகையழுத்த விழித்திரை நோய் கீழ் வருமாறு தரப்படுத்தப்படும் (கீத்-வேக்னர் வகைப்பாடு):
- தரம் 1: குறிப்பாக சிறு கிளைகளில் பொதுவான மித நுண் தமனி குறுக்கமும் முறுக்கமும் இதன் இயல்பு. நுண் தமனி ஒளி எதிர்வினை விரிவாக்கமும் சிரை மறைப்பும் இருக்கும்.
- தரம் 2: கடும் பொதுவான மற்றும் குவிய நுண் தமனி குறுக்கம் இருக்கம். தமனி சிரை கடக்குமிடத்தில் சிரை விலகல் இருக்கும் (சாலு அறிகுறி).
- தரம் 3: இதில் அடங்கி இருப்பவை: நுண் தமனி ‘காப்பர்-ஒயரிங்’, போனட் அறிகுறி, கன் அறிகுறி, நரம்புகளின் செங்கோண விலகல், காட்டன் – ஊல் பகுதிகள், கடினக் கசிவுகள் மற்றும் பிழம்பு – வடிவ இரத்தக் கசிவுகளும் இருக்கலாம்.
- தரம் 4 : தரம் 3-ன் மாற்றங்களோடு, நுண் தமனிகளின் வெள்ளி ஒயரிங்கும் தட்டு வீக்கமும் காணப்படலாம்.
மண்டலம் சார் மிகையழுத்த்த்தில் பின் வரும் வெளிப்பாடுகளையும் காணப்படலாம்:
- விழித்திரைத் தமனி கோளாறு
- விழித்திரைத் தமனிக் கிளைக் கோளாறு
- விழித்திரைத் தமனி பெரும்நெளிவு
- எல்ஸ்நிக் புள்ளிகள்
- குருதியோட்டத்தடை கண் நரம்புக் கோளாறு
ஒளிர் குழல்வரைவி சோதனை: கடும் தீய மிகையழுத்தம் இச்சோதனையில் காட்டுவன: விழித்திரை நுண்குழல்கள் மேற்பரவாமை, பெரும்நரம்பு நெளிவுகள் மற்றும் முதல் கட்டத்தில் கருவிழிப்படல நிரப்பலில் நரம்பிழை வடிவம். பின் கட்டத்தில் பரவும் கசிவு காணப்படும்.
விழித்திரை மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த முதல் நடவடிக்கையாக மண்டலம்சார் மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
வாழ்க்கைமுறை மாற்றமும், ஆபத்துக் காரணிகளைத் தவிர்ப்பதும் (உப்பு, புகையிலை) மிகை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
கீழ்க்கண்ட வகை மருந்துகளைப் பயன்படுத்தலாம்:
- டியூரெட்டிக்ஸ்
- பீட்டா தடுப்பிகள்
- ஆஞ்சியோடென்சின் மாற்றும் நொதித் தடுப்பிகள்
- கால்சியம் சானல் பிளாக்கர்கள்
- ஆஞ்சியோடென்சின் ரிசப்டார் ஆண்டகோனிஸ்ட்கள்
கடும் விழித்திரை மிகையழுத்த நோயாளிகளுக்கு இதயத் தமனி நோய், பக்கவாதம் அல்லது மேற்புற இரத்தக்குழல் நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். தமனிச்சுவர் தடிப்பு விழித்திரைப் பெரும்நரம்பு நெளிவு, விழித்திரைத் தமனி அல்லது சிரைக் கோளாறுகளை அதிகரிக்கும். கண் நரம்பு மற்றும் விழித்திரைப்பொட்டு பாதிப்புகளால் பார்வைத் திறன் குறைவு குறையும்.
பார்வையைப் பாதிக்கும் சிக்கல் கொண்ட விழித்திரை மிகையழுத்தம்: விழித்திரை வீக்கம் போன்ற பார்வையைப் பாதிக்கும் சிக்கல்களுக்கு லேசர் சிகிச்சை அல்லது நாள அகச்சவ்வு வளர்ச்சிக் காரணி மருந்துகளை ஊசி மூலம் விழிப்பின்னறையில் செலுத்துதல் ஆகிய சிகிச்சைகள் அளிக்கலாம்.
மருந்துகள், லேசர் மற்றும் விழிப்பின்னறை ஊசி ஆகிய சிகிச்சைகளை தேர்ந்த ஒரு மருத்துவரின் கண்காணிப்பிலேயே செய்ய வேண்டும்.