டெங்கு ஒரு சாதாரணத் தொற்றுநோயாக இருந்தாலும் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது ஆகும். இது எலும்பை நொறுக்கும் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. நுண்ணுயிர்களைக் கொண்ட கொசுக்கள் கடிப்பதால் இந்நோய் உண்டாகிறது. இது வெப்ப மண்டலப் பகுதிகளிலும், மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் பெரும்பாலும் காணப்படுகிறது.
ஒரு சிறு பகுதி நோயாளிகளுக்கு இது உயிருக்கு அபாயம் விளைவிக்கும் இரத்த ஒழுக்கு டெங்கு காய்ச்சலாக மாறுகிறது. இதன் விளைவாக:
ஏடிஸ் இனத்தைச் சேர்ந்த பலவகை கொசுக்கள் டெங்குக் காய்ச்சலைப் பரப்புகின்றன. இவற்றில் முக்கியமானது ஏ ஏஜிப்டி வகை பெண் கொசுவாகும். குறைந்த கால அளவுள்ள டெங்குக் காய்ச்சலுக்கு நோய் இலகுவாக இருந்தால் வாய்வழியாக அல்லது நரம்பு மூலமாக மறுநீரேற்றம் செய்யலாம். கடுமையான காய்ச்சலுக்கு நரம்பு மூலமாக நீரேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்புகள்: www.aiims.edu
www.nvbdcp.gov
dengue.pitb.gov.pk
www.cdc.gov
www.who.int
www.mohfw.noic.in
பொதுவாக உடலுக்குள் டெங்கு நுண்ணுயிரி உட்புகுந்து 3-14 நாட்கள் கழித்து (அடைகாக்கும் பருவம்) அறிகுறிகள் வெளிப்படுகின்றன. சராசரியான அடைப்பருவம் 4-7 நாட்கள் ஆகும்.
டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள்:
திடீரென தொடங்கும் காய்ச்சல்
தலைவலி (பொதுவாகக் கண்களுக்குப் பின்னால்)
தசை மற்றும் மூட்டுகளில் வலி
சொறி
குளிர்(நடுக்கத்துடன்)
தட்டையான சிவப்பு தோல் படை
முகம் சிவத்தல்
பசியின்மை
தொண்டை கரகரப்பு
மூக்கு, ஈறு ஆகியவற்றில் அசாதாரணமான இரத்தக்கசிவு/ அல்லது சிறுநீரில் இரத்தம் வருதல்.
குறிப்புகள்: www.nhs.uk
www.nvbdcp.gov
நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்ட ஏடிஸ் ஏஜிப்தி வகை கொசுக்களால் இந்நோய் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் பகலிலேயே கடிக்கின்றன. இரவில் பெரும்பாலும் கடிப்பதேயில்லை. டெங்குக் காய்ச்சல் நுண்ணுயிரி (DENV) ஒரு ஃபிளாவிவிரிடே ( Flaviviridae) குடும்பத்தைச் சேர்ந்த RNA நுண்ணுயிரியாகும். இவற்றில் செரோடைப்புகள் என அழைக்கப்படும் DENV-1, DENV -2, DENV -3, DENV -4 ஆகிய நான்கு விகாரவகைகள் உண்டு.
டெங்கு நுண்ணுயிரிகள் ஒரு சுழற்சி வட்டத்திலேயே பரவுகின்றன. நோயுற்ற ஒரு மனிதனைப் பெண் கொசு கடிக்கிறது. நுண்ணுயிரியால் தாக்கப்பட்ட கொசு பின் ஒரு மனிதனைக் கடிக்கிறது. இவ்வாறு இச் சுழற்சி தொடர்கிறது.
குறிப்புகள்: www.nhs.uk
www.who.int
காய்ச்சலுடன் கீழ்க்காணும் அறிகுறிகளில் குறைந்தபட்சம் இரண்டு காணப்பட்டால் டெங்கு என்று ஒருவாறு அனுமானிக்கலாம்:
நுண்ணோக்கிச் சோதனை : இரத்த வெள்ளணு குறைவும் தொடர்ந்து தட்டணுக்கள் குறைதலும், வளர்சிதை அமிலத்தேக்கமும் ( metabolic acidosis) தொடக்கத்தில் ஆய்வகத்தில் கண்டறியக் கூடிய மாற்றங்களாகும். வெள்ளணுக்களும் தட்டணுக்களும் குறையும் போது பொதுவாகவே அமினோ அமில இடமாற்றி அளவில் (AST and ALT) சற்றே ஏற்றம் ஏற்படக்கூடும்.
துரிதக் கண்டறியும் சோதனைகள்: டெங்கு எதிர்ப்பு IgG & IgM நோயெதிர்ப் பொருட்களைக் குறிப்பாகக் கண்டறியத், துரித டெங்கு சோதனை சிறந்த ஆய்வு முறையைக் கொண்டுள்ளது. சோதனை மாதிரிகளில், IgG நோயெதிர்ப்பொருட்களின் (antibodies) வேதியல் வினையூக்கிகள் (titers) அதிக அளவில் இருப்பது IgM நோயெதிர்ப்பொருட்களைக் கண்டறியும் சோதனையில் குறுக்கிடாது. நன்கு தூய்மைபடுத்தப்பட்ட டெங்குப் புரதக் கலவையைச் சோதனையில் பயன்படுத்தும் போது டெங்கின் நான்கு ஊனீர் வகைகளையுமே (serotype) கண்டறியலாம்.
குறிப்புகள்: www.who.int
தற்போது அறிகுறிகளைக் கொண்டே டெங்குக்காய்ச்சலுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது
வலி நீக்கிகளான பாரசெட்டமால் போன்றவை பயன்படும். இரத்தப்போக்கை அதிகப்படுத்தும் ஆஸ்பரின் ஆகியவற்றைத் தவிர்க்கவும். படுக்கையில் ஓய்வெடுத்து நீராகாரங்களை அதிகமாக அருந்தவும். 3-5 நாட்களுக்குள் நிலமை சீராகாவிட்டால் மேல் மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்.
குறிப்புகள்: www.nvbdcp.gov.in
www.who.int
டெங்குக் காய்ச்சல் முற்றி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் கடும்டெங்குக் காய்ச்சலாக மாறுவதுண்டு. இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஏற்கெனவே ஒருமுறை டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தால் ஆபத்து அதிகம். இது அசாதாரணமானதும் அல்ல.
இன்னொரு சிக்கல் என்னவென்றால் கடுமையான டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தம் திடீரென குறைவதற்கு வாய்ப்புண்டு. இதற்கு டெங்கு நோய்க்குறி ஒத்திசைவு அதிர்ச்சி (dengue shock syndrome) என்று பெயர். அவற்றுள் கீழ்வருவன அடங்கும்:
குறிப்புகள்: www.nhs.uk
டெங்குக் காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பூசிகள் எதுவும் இல்லை. சிறந்த தடுப்பு முறை கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதுதான்.
குறிப்புகள்: www.nhs.uk