புருசெல்லா விலங்குகளால் பரவும் நோயாகும் (முதுகெலும்புள்ள விலங்கில் இருந்து மனிதனுக்கும் மனிதனில் இருந்து விலங்கிற்கும் பரவும் நோய்). இது முறைக்காய்ச்சல், நடுநிலக்காய்ச்சல், மால்ட்டா காய்ச்சல் என்றெல்லாம் அழைக்கப்படும். இது பொதுவாகக் கால்நடைகள், பன்றி, வெள்ளாடு, செம்மறி மற்றும் நாய்களுக்கு உண்டாகும் நோய்.
இத் தொற்று மனிதர்களுக்கு நச்சுக்கொடி போன்றவை உடல் மேல் படுவதாலும், விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை உட்கொள்ளுவதாலும், காற்றில் காணப்படும் கிருமிகளை நுகர்வதாலும் உண்டாகிறது. பச்சைப் பால், பச்சைப்பாலாடைக் கட்டி ஆகியவையே மனிதருக்கு இந்நோய் ஏற்பட முக்கிய காரணம். கால்நடைத் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இந்நோய் உண்டாகும். இந்நோய் இருபாலாரையும் எந்த வயதினரையும் பாதிக்கும்.
குறிப்புகள்:
http://www.who.int/csr/resources/publications/Brucellosis.pdf
ஆரம்ப கட்ட அறிகுறிகளில் அடங்குவன: காய்ச்சல், பலவீனம், உடல்சோர்வு, பசியின்மை, தலைவலி, தசை, மூட்டு மற்றும்/அல்லது முதுகு வலி, களைப்பு.
நீண்ட காலம் நிலைத்து இருக்கும் நோயறிகுறிகளில் சில:
தொடர் காய்ச்சல், கீல்வாதம், விரை மற்றும் இடுப்புத்தொடை நரம்புப்பகுதி வீக்கம், இதய வீக்கம், நீடித்த களைப்பு, மனவழுத்தம், கல்லீரல் மற்றும்/அல்லது மண்ணீரல் வீக்கம்.
நோய்ச்சிக்கல்கள் எந்த ஒரு உறுப்பு மண்டலத்தையும் பாதிக்கலாம்.
குறிப்புகள்: www.cdc.gov
புருசெல்லா அபார்ட்டஸ், புருசெல்லா மெலிடென்சிஸ், புருசெல்லா சூயிஸ், புருசெல்லா கேனிஸ் போன்ற புருசெல்லா பாக்டீரியாவின் பல்வேறு சிற்றினங்களால் இந்நோய் ஏற்படுகிறது.
தொற்று விலங்குகளில் இருந்து மனிதனுக்கு மூன்று வெவ்வேறு விதங்களில் பரவுகிறது:-
தூசி, சாணம், நீர், சகதி, சிதைகரு, மண், இறைச்சி, பால்பொருட்கள் ஆகியவற்றில் புருசெல்லா பாக்டீரியா வகைகல் நீண்ட காலத்துக்கு நிலைத்து வாழும்.
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுவது மிகவும் அரிதே.
நோயரும்புகாலம் மிகவும் வேறுபடும். பொதுவாக 2-4 வாரங்கள். 1 வாரத்தில் இருந்து 2 மாதங்களும் அதற்கு மேலும் நீளலாம்.
குறிப்புகள்:
www.who.int/zoonoses/diseases/brucellosis/en/
www.who.int/zoonoses/diseases/Brucellosissurveillance.pdf?ua=1
மருத்துவ ஆய்வுகளில் தெளிவு கிடைக்காத போது ஆய்வகச் சோதனைகள் மூலம் நோய்கண்டறிதல் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.
உத்தேச நோய்கண்டறிதல்
உறுதிப்படுத்தும் கண்டறிதல்
குறிப்புகள்: www.who.int/csr/resources/publications/Brucellosis.pdf
தொற்றைக் கட்டுப்படுத்தவும் நோய் திரும்பவும் வராமல் தடுக்கவும் நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப் படுகின்றன. சிக்கல்கள் இருந்தால் நீண்ட நாள் தொடர் மருந்து சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
மேல் சிகிச்சைக்காக மருத்துவ ஆலோசனை பெறவும்.
குறிப்புகள்:
www.nlm.nih.gov/medlineplus/ency/article/000597.htm
www.who.int/csr/resources/publications/Brucellosis.pdf
விலங்குகளில் காணப்படும் தொற்றை ஒழிப்பதே மனித புருசெல்லா நோயை ஒழிப்பதற்கான பகுத்தறிவுக்கு உகந்த அணுகு முறை ஆகும்.
கிருமி நீக்கப்பட்ட பாலையும் பால் பொருட்களையும் பயன்படுத்தவும் இறைச்சியைப் போதுமான அளவுக்கு சமைக்கவும் மக்களுக்கு அறிவு புகட்ட வேண்டும்.
நோய் ஆபத்துள்ள வேட்டைக் காரர்களும் தொழில்முறையினரும் (இறைச்சி வெட்டுபவர், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள்) காப்புத் தடைகள் அணிவதோடு நச்சுக்கொடி போன்றவற்றைக், குறிப்பாகக் கருச்சிதைவின் போது, கவனமுடன் கையாள வேண்டும்.
குறிப்புகள்:-
http://www.who.int/zoonoses/diseases/brucellosis/en/
http://www.who.int/zoonoses/diseases/Brucellosissurveillance.pdf
http://www.who.int/csr/resources/publications/Brucellosis.pdf