மஞ்சள் காய்ச்சலைப் பற்றி பயணிகளுக்கு ஆலோசனை
கே.மிகவும் பொதுவான பயணப் பிரச்சினைகள் எவை? அவற்றிற்கான சிகிச்சைமுறைகள் எவை?
மத்திய கிழக்கு சுவாச நோய் (MERS)- வைரசால் உண்டாகும் சுவாச நோயான இது 2012-ல் முதன்முறையாக சவுதி அரேபியாவில் காணப்பட்டது. இது MERS-CoV என்ற கோரானா வைரசால் உண்டாகிறது. இத் தொற்று இருந்ததாக உறுதி செய்யப்பட்டப் பெரும்பாலானவர்களுக்குக் கடுமையான சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவர்களுக்குக் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தன. இதில் பாதிப்பேர் மரணம் அடைந்தனர்.
http://www.cdc.gov/coronavirus/mers/
விமானப் பயணச் சோர்வு (Jet Lag) — வயதானவர்களுக்கு கடுமையான சோர்வு ஏற்படலாம். மீண்டுவர அதிகக் காலம் பிடிக்கும். விரைவாக சராசரி வாழ்க்கைக்கு திரும்பினால் இச்சோர்வைக் குறைக்கலாம். பயணத்துக்கு சில நாட்களுக்கு முன் தூக்க முறைமையைப் பயணிகள் மாற்றி அமைத்துக் கொண்டால் பயணச்சோர்வைக் குறைக்கலாம்.
பயணிகள் வயிற்றுப்போக்கு (Traveler's diarrhea) — அசுத்த உணவு, நீர், பதட்டம், பயணச்சோர்வு ஆகியவை பயணிகள் வயிற்றுப்போக்கை உண்டாக்கும். இது திடீரென ஏற்படும். நான்கு அல்லது ஐந்து முறை இளகி அல்லது நீர்போல மலம் போகும். பொதுவாக மருந்து இல்லாமலேயே பயணிகள் வயிற்றுப்போக்கு இரண்டொரு நாட்களில் தானாகவே சரியாகிவிடும். கிருமிக்கொல்லிகள், பிஸ்மத் சப்சேலிசைலேட் (பெப்டோ-பிஸ்மால்) போன்ற தடுப்பு மருந்துகளைப் பெரும்பாலான மருத்துவர்கள் தேவைப்பட்டாலொழிய பரிந்துரைப்பதில்லை. மிகச் சுத்தமான கை, பாதுகாப்பான உணவு, நீர் ஆகியவைகளே சிறந்த தடுப்பு முறை. அனைத்துலகப் பயணிகள் குப்பிப் பானங்கள் அல்லது கொதிக்க வைக்கப்பட்ட நீர்மங்களையே குடிக்க வேண்டும்.
வாகனக் குமட்டல் (Motion sickness) — வாகனப்பயணக் குமட்டல் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும். குறைப்பதற்கு சில இயற்கையான வழிமுறைகள் உண்டு. மணிக்கட்டு அழுத்துப்பட்டை, இஞ்சித் தேனீர், மாற்று உணவுகள், மணப்பொருள் சிகிச்சை ஆகியவை இவற்றில் அடங்கும்.
உயரத்தால் உண்டாகும் நோய் (Altitude sickness) : எப்போதும் இருப்பதை விட அதிக உயரத்திற்குச் செல்லும்போது உலர் காற்று, உயிர்வளி குறைவு, குறைந்த காற்றழுத்தம் ஆகியவற்றால் நோய் ஏற்படும். இதனால், தலைவலி, நீர்ச்சத்துக்குறைதல், மூச்சுத்திணறல் ஆகியவை உண்டாகும். சிலர் 5000 அடிகளில் (1524 மீட்டர்கள்) பாதிக்கப்படுவர். மற்றவர்கள் 10000 அடிகளும் (3048 மீட்டர்கள்) அதற்கு மேலும் சென்றாலும் பாதிப்படைய மாட்டார்கள்.
பயணத்துக்கு முன் கவனம் (Care before travel) — எல்லா வயதுடையவர்களும், பயணத்துக்கு முன் குறிப்பாக நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு ஒரு மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளலாம். பயணத் திட்டத்தோடு சம்பந்தப்பட்ட உடல் நல ஆபத்துக்களை மருத்துவர் உடல் பரிசோதனை செய்து கணிப்பார்.
கே. தொற்று நோய் என்று இனங்காணப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
தனிமைப்படுத்துதலும் தடுப்புக்காப்பும்:
தனிமைப்படுத்தலும் தடுப்புக்காப்பும் நோய்கள் பரவாமல் தடுக்க அல்லது கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொது சுகாதார வழக்கமே.
-
தனிமைப்படுத்துதல்: தொற்றுநோய் உள்ள ஒருவரை உடல்நலத்தோடு இருக்கும் ஒருவரிடம் இருந்து பிரிக்கத் தனிமைப்படுத்துதல் பயன்படுத்தப்படுகிறது.
-
தடுப்புக்காப்பு என்பது நல்லநிலையில் இருக்கும் ஒருவர் தொற்று நோய் உள்ள பகுதிக்கு சென்று வந்திருந்தால் அவருக்கு நோய் தொற்றியுள்ளதா என்று கண்டறிய தனிமைப் படுத்தி அவரது நடமாட்டத்தைத் தடுப்பது ஆகும்.
எல்லைக் கட்டுப்பாட்டிலும், உள்நாட்டிற்குள்ளும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தடுப்புக்காப்பு பொருந்தும்.
கே. பயணம் செல்லும்போது மருத்துவ கவனிப்பை எவ்வாறு பெறுவது?
-
செல்லும் இடத்தில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகளின் பட்டியலை எடுத்துச் செல்லவும்.
-
பயணத்தை உள்ளடக்கிய மருத்துவ காப்பீடு, சுகாதார காப்புறுதியில் அடங்கி உள்ளதா என்று மறுபரிசீலனை செய்யவும். பயண ஆரோக்கியம், மருத்துவ வெளியேற்ற காப்புறுதிகள் அடங்கிய ஒரு காப்புறுதித்திட்டத்தில் சேர சிந்தனை செய்யவும்.
-
உங்கள் இரத்த வகை, நீடித்த நோய்கள், ஒவ்வாமைகள், பயன்படுத்தும் மருந்துகளின் பொதுப்பெயர்கள் ஆகிய விவரங்கள் செல்லும் இடத்தில் பேசப்படும் மொழியில் எழுதப்பட்ட அட்டையைக் கொண்டு செல்லவும்.
-
நீங்கள் பயன்படுத்தும் சில மருந்துகள் நீங்கள் செல்லும் நாட்டில் தடைப்படுத்தப் பட்டிருக்கலாம். தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளவும்.
-
நீங்கள் பயன்படுத்தும் சில மருந்துகள் நீங்கள் செல்லும் நாட்டில் தடைப்படுத்தப் பட்டிருக்கலாம். தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளவும்.
கே. இந்தியாவுக்கு செல்லும்போது எந்தெந்தத் தடுப்பூசிகள் தேவை?
நீங்கள் செல்லும் இடத்தைப் பொறுத்தே பொதுவாகத் தடுப்பூசி தேவைப்படும். நாடுகளையும் நிலைமைகளையும் பொறுத்தே குறிப்பான தடுப்பு மருந்துகள் அமைகின்றன. அவையாவன:
பொதுவான தடுப்பு மருந்துகள்:
தனிப்பட்ட தேவைகளைக் கொண்ட பயணிகளுக்கான தடுப்புமருந்துகள்
தொற்று அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயம் உள்ள பயணிகளுக்குச் சில கூடுதல் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆஸ்துமா, மூச்சு மற்றும் இதயப் பிரச்சினைகள், வளர்சிதைமாற்ற நோய்கள் (நீரிழிவு போன்றவை) கொண்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதில் அடக்கம். தடுப்பு மருந்துகளாவன:
-
நச்சுக்காய்ச்சல் (இன்ஃபுளுயன்சா)
-
நிமோனியா
இளம்பயணிகளுக்கான தடுப்புமருந்துகள்
இளம்பயணிகளுக்கும் வழக்கமாக கீழ்வருவனவற்றுக்கு தடுப்புமருந்துகள் தரப்படுகின்றன:
-
குருதித்தொற்று (Meningococcal C)
-
கல்லிரல் அழற்சி-B
-
கர்ப்பப்பைவாய்ப் புற்று
உலகச் சுகாதார நிறுவனம் காலாரா தடுப்பு மருந்தை எந்த நாட்டிற்கும் பரிந்துரைக்கவில்லை..
குறிப்பிட்ட நோய்களுக்கான தடுப்பு மருந்து
கல்லீரல் அழற்சி நோய் A (Hepatitis A)
கல்லீரல் A பற்றிய செய்திகள்:
-
இதுவே பயணிகளுக்கு தடுப்பு மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடிய பொதுவான நோயாகும்
-
இது கிருமிகளால் அசுத்தமான உணவு அல்லது நீரால் பரவுகிறது
-
காரணம் வைரசாகும்
-
காய்ச்சல், ஆற்றலிழப்பு, மஞ்சள் காமாலை ஆகியவை அறிகுறிகள்
-
உயிருக்கு பெரும்பாலும் ஆபத்தில்லை
-
அறிகுறிகளைக் கொண்டே மருத்துவம் செய்ய முடியும்
-
தடுப்பு மருந்து பாதுகாப்பானதும் பயனளிப்பதுமாகும்
கல்லீரல் அழற்சி நோய் B
கல்லீரல் அழற்சி நோய் B பற்றிய செய்திகள்:
-
இது உடல் பாய்மங்களால் பரவுகிறது. பொதுவாக உடல் உறவு அல்லது மருந்தூசிப் பகிர்வு அல்லது எதிர்பாராத விதமாகவும் பரவக் கூடும்.
-
வைரசால் உண்டாகிறது.
-
காய்ச்சல், ஆற்றலிழப்பு, மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள்
-
உலக அளவில் பாதி நோயாளிகள் இறக்கின்றனர்.
-
தடுப்பு மருந்து பாதுகாப்பானதும் பயனளிப்பதுமாகும்
குடற்காய்ச்சல் (Typhoid)
குடற்காய்ச்சல் பற்றிய செய்திகள்:
-
வளர்ந்துவரும் நாடுகளில் இது பரவலாகக் காணப்படுகிறது.
-
இதற்குக் காரணம் பாக்டீரியா ஆகும்.
-
காய்ச்சல், பலவீனம், தலைவலி, சில வேளை சொறி ஆகியவை அறிகுறிகள்.
-
நுண்ணுயிர்க்கொல்லிகளால் மருத்தவத் தீர்வு உண்டு.
-
குறைந்தபட்சமாக ஒருவாரத்துக்கு முன் தடுப்பு மருந்துகளை எடுத்து முடிக்க வேண்டும்.
வெறிநாய்க்கடி நோய்
வெறிநாய்க்கடி நோய் பற்றிய செய்திகள்:
-
இது வட, நடு மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் பரவலாக உள்ளது.
-
தொற்று நோயுள்ள நாய் அல்லது ஒரு பாலூட்டியால் கடிக்க அல்லது கீறப்படும்போது பரவும் வைரசால் ஏற்படுகிறது.
-
தலைவலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் தோன்றும்; வலிப்பும் மரணமும் தொடரும்.
-
பயணத்துக்கு 3-4 வாரத்துக்கு முன் ஒரு மூன்று வேளை தடுப்பூசி இடப்படுகிறது.
-
ஒரு மிருகம் கடித்தாலோ அல்லது நகத்தால் பிராண்டினாலோ குறைந்தபட்சம் 10 நிமிடமாவது சோப்புத் தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
-
வெறியுள்ளதாகக் கருதப்படும் மிருகம் கடித்தபின் ஒரு 5 வேளை தடுப்பூசி இடப்படுகிறது. ஏற்கெனவே தடுப்பூசி இடப்படவில்லை என்றால் ஒரு வேளை நோயெதிர்ப்புப்புரதமும் அளிக்க வேண்டும்
குருதித்தொற்று மூளைக்காய்ச்சல்
குருதித்தொற்று மூளைக்காய்ச்சல் நோய் பற்றிய செய்திகள்:
-
காற்று நுண்துளிகள் மூலம் பரவும் வைரசால் ஏற்படுகிறது.
-
தலவலி, காய்ச்சல், குழப்பம், நரம்புச்சிதைவு ஆகியவை இதன் அறிகுறிகள்
-
மருத்துவம் அறிகுறிகளை மட்டுமே குறைக்கும்
-
தடுப்பு மருந்து சில நாடுகளில் சட்டப்படி கட்டாயம்.
காசநோய்
காசநோய் பற்றிய செய்திகள்:
-
வளர்ந்துவரும் நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது
-
காற்று நுண்துளிகள் மூலம் பரவும் பாக்டீரியாவே காரணம்
-
தொடர் காய்ச்சல் மற்றும் காய்ச்சல் ஆகியவை அறிகுறிகள்
-
நுண்ணுயிர் கொல்லிகளால் நீடித்த மருத்துவம் செய்யப்படுகிறது.
-
அதிக அபாயம் உள்ள இடங்களுக்கு நீண்ட காலம் தங்கச் செல்லும் சில பயணிகளுக்கு தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு முன் ஒரு சிறப்பு தோல் சோதனை (மாண்டௌக்ஸ்) செய்யப்பட வேண்டும்.
ஜப்பானிய மூளையழற்சி
ஜப்பானிய மூளையழற்சி பற்றிய செய்திகள்:
-
ஆசியா முழுவதும் காணப்படுகிறது.
-
கொசுவால் பரப்படும் வைராசால் ஏற்படுகிறது.
-
தலைவலி, காய்ச்சல், குழப்பம், நரம்புச் சிதைவு ஆகிய அறிகுறிகள் ஏற்படும்
-
மருத்துவமே அறிகுறிகளின் கடுமையைத் தணிக்கும்
-
நீங்கள் பயணம் செல்லுமுன் மூன்று வேளை தடுப்பு மருந்து அவசியம்
மஞ்சள் காய்ச்சல்
-
இது தெற்காசியாவின் வெப்பமண்டலப் பகுதியிலும் சாகாரவைச் சார்ந்த பகுதியிலும் காணப்படுகிறது.
-
தொற்று ஏறிய கொசுவால் பரப்பப்படும் வைரசால் உண்டாகிறது.
-
காய்ச்சல், தலவலி, இரத்த வாந்தி, மஞ்சள் காமாலை ஆகிய அறிகுறிகளுடன் மரணமும் ஏற்படலாம்.
-
தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு நோயைத் தடுக்கிறது.
-
சில நாடுகளில் தடுப்பூசி சட்டப்பூர்வமான தேவையாகும். அதிகார பூர்வமான பயண சுகாதார மருத்துவ மனைகள் மட்டுமே சான்றிதழ் தர முடியும்.
தடுப்பு மருந்து அற்ற தொற்று நோய்கள்
உணவு, நீர் அல்லது தனிநபர் சுகாதாரக்குறைவு ஆகியவற்றாலேயே பொதுவாக தொற்று நோய்கள் பரவுகின்றன (உதாரணமாக இரைப்பை நோய்கள், பயணியர் வயிற்றுப்போக்கு, குடல்தொற்று, அமீபிக் வயிற்றுப்போக்கு). பூச்சிகளாலும் ஏற்படும் (உ-ம். மலேரியா, டெங்குக் காய்ச்சல்). அவை உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும். இவற்றைத் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மருந்துகள் பற்றி மருத்துவர் ஆலோசனை கூறுவார்.
http://wwwnc.cdc.gov/travel/destinations/traveler/none/india
பயணத்தின் போது எடுக்க வேண்டிய தடுப்பு மருந்துகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு http://wwwnc.cdc.gov/travel
கே. பயணியர் வயிற்றுப்போக்குக்குக் காரணங்கள் எவை?
அசுத்தமான உணவும் நீரும் பயணியர் வயிற்றுப்போக்கையும் பிற நோய்களையும் உண்டாக்கும். பாதுகாப்பான நீரையும் உணவையும் உட்கொள்ளும் பழக்கத்தால் இவற்றைக் குறைக்கலாம். சிறந்த உணவுப் பழக்கத்துக்கு செய்ய வேண்டியவையும் வேண்டாதவையும்:
உண்ணுக
-
சூடான சமைத்த உணவு
-
நன்றாக வேகவைத்த முட்டை
-
சுத்தமாகக் கழுவப்பட்ட பழங்களும் காய்கறிகளும்
-
கிருமி அழிக்கப்பட்ட பால் பொருட்கள்
உண்ண வேண்டாம்
-
அறை வெப்ப உணவு
-
தெருவில் கிடைக்கும் உணவு
-
பச்சை அல்லது அரைவேக்காட்டு முட்டை
-
பச்சை அல்லது சரியாக வேகவைக்கப்படாத இறைச்சியும் மீனும்
-
கழுவாத, தோல் சீவாத, பச்சைப் பழங்களும் காய்கறிகளும்
-
கிருமி அகற்றாத பால் பொருட்கள்
குடிக்கவும்
-
மூடியடைக்கப்பட்ட பாட்டில் நீர்
-
கிருமி அகற்றிய நீர்
-
கார்பனேற்றிய நீர்
-
சூடான காப்பி அல்லது தேனீர்
-
கிருமி அகற்றிய பால்
குடிக்க வேண்டாம்
-
குழாய் அல்லது கிணற்று நீர்
-
குழாய் அல்லது கிணற்று நீரால் செய்யப்பட்ட ஐஸ்
-
குழாய் அல்லது கிணற்று நீரால் உருவாக்கப்பட்ட பானங்கள்
-
கிருமி அகற்றாத பால்
மருந்துகளைக் கொண்டுசெல்லவும்
மருத்துவர் சீட்டு அல்லது கடை மருந்துகளை பயணத்தின் போது கொண்டு செல்லவும்.
கே. மூட்டைபூச்சிக் கடியை எவ்வாறு தடுக்கலாம்?
-
வெளித்தெரியும் உடல் பாகங்களை நீண்ட சட்டை, பேண்ட், தொப்பியால் மறைக்கவும்
-
தகுந்த பூச்சி விரட்டியைப் பயன்படுத்தவும்
-
பெர்மெத்ரின் பூசிய ஆடைகளையும், காலணி, பேண்ட், காலுறை, கூடாரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். பெர்மெத்ரினை நேரடியாக உடலில் பூச வேண்டாம்.
-
காற்றுப்பதன அல்லது திரையிடப்பட்ட அறைகளில் தங்கித் தூங்கவும்.
-
வெளிப்புறமாய் இருந்தால் தூங்கும்போது கொசு வலையைப் பயன்படுத்தவும்.
http://wwwnc.cdc.gov/travel/page/avoid-bug-bites
கே. எவ்வித பூச்சி விரட்டியைப் பயன்படுத்த வேண்டும்?
-
கொசுவுக்கும் உண்ணிக்கும் எதிரான பாதுகாப்பு: பலமணி நேரத்துக்கு வரும் 20 சதவிகிதத்துக்கு அதிகமாக தீத் பூச்சிமருந்து கொண்ட பூச்சி விரட்டியைப் பயன்படுத்தவும்.
-
எப்போதும் பூச்சி மருந்தை வழிகாட்டலின் படியே பயன்படுத்தவும்.
வெளித் தொடர்புகள்/குறிப்புகள்