மனித வரலாற்றைப் போலவே பேரிடர்களும் பழமையானவை. ஆனால், சமீபகாலமாக அவற்றின் அபரீதமான பெருக்கமும், அவற்றால் விளையும் சேதங்களும் தேசிய அளவிலும் உலக அளவிலும் கவலைக்கு உரியனவாகத் திகழ்கின்றன.
மீள முடியாத அளவுக்குப் பரந்துபட்ட சேதங்களை விளைவிக்கும் ஆபத்தான சூழ்நிலைகளே பேரிடர் என வரையறுக்கப்படுகிறது. இவ்வாறு இந்த வரையறைப்படி சேதத்தைத் தடுக்கும் அளவுக்கு ஒரு முழுமையான அமைப்பு இல்லை. இருந்தால் அதை ஒரு பேரிடர் என அழைக்க முடியாது. அது நமது மீளும் திறனைத் திணறடிக்கும் வகையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அதைப் பேரிடர் எனக் கூறமுடியும். ஏற்படுத்தும் சேதத்தின் அளவில் அல்லது அது ஏற்படுத்தும் மருத்துவ ரீதியான விளைவுகளின் தன்மையில் பேரிடர்கள் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.
பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களைத் தடுப்பதும் கையாளுவதமான ஒரு துறை. ஆபத்துகளைத் தடுத்துக் கையாளும் துறை. பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்க, முன்னெச்சரிக்கை, உடனடி செயல்பாடு மற்றும் மீட்பு ஆகியவை இத்துறையில் அடங்கியுள்ளன. சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இத்தகையப் பேரிடர்களை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும்.
இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான விவரமான தகவலுக்கு இங்கே சொடுக்கவும்.
பேரிடர் ஆபத்து மேலாண்மை பற்றிய இணைய பாடத்துக்கு.
பேரிடர் காலத்தில் மனதில் வைக்க வேண்டிய சில பொதுவான நடவடிக்கைகள் வருமாறு:
1. உதவிக்குக் குரல் கொடுக்கவும்: அவசர தேவைக்கு குரல் கொடுக்கவும். அருகில் இருக்கும் மக்கள் உதவிக்கு வரக்கூடும்.
2. மருத்துவ ஊர்தியை அழைக்கவும்: அவசரகால எண்களை நினைவில் வைத்துக் கொள்ளுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
3. மிகவும் முக்கியம்: எப்போதும் முதலுதவிப் பெட்டியை வீட்டில், பொது/தனியார் வாகனங்களில் மற்றும் பணி இடத்தில் வைத்திருக்க வேண்டும். உங்கள் முதலுதவிப் பெட்டி, ஒட்டும் டேப், பாண்டேஜுகள், 3 மீடியம் மற்றும் 3 பெரிய கிருமிநீக்கம் செய்யப்பட்ட கட்டுத்துணிகள், பஞ்சு, பஞ்சு பட், பயனுக்குப் பின் களையும் பொருட்கள் (கையுறை/நாக்கழுத்தி), இடுக்கி, கத்திரிக்கோல் மற்றும் சேஃப்ட்டி பின் போன்ற அனைத்து சாதனங்களையும் கொண்டிருக்க வேண்டும். பேரிடர் பற்றிய தகவலுக்கு அழைக்கவும்
இலவச எண்: 1070 FOR INFORMATION ON DISASTERS DIAL TOLL FREE NO.1070
இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுபவை இயற்கைப் பேரிடர்கள் ஆகும் (வளிமண்டல, நிலவியல் அல்லது உயிரியல் தோற்றம் கொண்டன). சூறாவளி, ஆழிப்பேரலை, நிலநடுக்கம் மற்றும் எரிமலை எழுச்சி ஆகியவை இயற்கைத் தோற்றத்தை கொண்ட இயற்கை ஆபத்துகளுக்கு எடுத்துக்காட்டுகள். நிலச்சரிவு, வெள்ளம், வறட்சி, தீ போன்றவை சமூக-இயற்கை ஆபத்துகள். ஏனெனில் இவற்றிற்குக் காரணம் இயற்கையும் மனித செயல்களும் ஆகும். உதாரணமாக, வெள்ளம் பெரு மழையின் காரணமாகவும் நீர்வழிகளை மனிதன் உருவாக்கும் கழிவுகளால் அடைப்பதன் மூலமும் உண்டாகலாம். இயற்கைப் பேரிடர்களின் வகைகள்:
மனிதனால் உருவாக்கப்படும் எதிர்பாராதப் பேரிடர்களும் நிகழ்வது உண்டு. மனிதனால் ஏற்படும் அனைத்துப் பேரிடர்களும் மனிதனின் துன்பத்திற்கும், உயிரிழப்புக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கு நீண்ட கால சிதைவையும் ஏற்படுத்தும். இந்த ஆபத்துகள் மனிதனின் கவனக்குறைவால் உண்டாகின்றன. இவை தொழிற்சாலைகள், ஆற்றல் உற்பத்தி ஆகியவற்றுடன் தொடர்புடையன. வெடித்தல், நச்சுப்பொருள் கசிவு, மாசு, அணை உடைப்பு, போர்கள் அல்லது மக்கள் கலகம் ஆகியவை இதில் அடங்கும். இவற்றை அணுசக்தி, உயிரியல் மற்றும் வேதியல் பேரிடர்கள் எனப் பகுக்கலாம். இவை மூன்று வகைப்படும்
பேரிடர் மேலாண்மையில் பின்வரும் கட்டங்கள் அடங்கும்
1. எதிர்வினைக் கட்டம்
2. மீட்சி/புனர்வாழ்வுக் கட்டம்
3. ஆபத்துக் குறைப்பு/மட்டுப்படுத்தல் கட்டம்
4. முன் ஆயத்தக் கட்டம்
பேரிடர் நிகழும் காலகட்டம் இது. மனித உயிர், சொத்து, சூழல் அல்லது ஆரோக்கிய இழப்புகள் ஏற்படலாம்.
ிர்வினைக் கட்டம்:
பேரிடரைத் தொடர்ந்து வரும் கட்டம் இது. இச்சூழலில் அனைவரும் அவரவர் சூழலுக்கு ஏற்றபடி செயல்படுவர்.
மீட்சி கட்டம்:
இக் கட்டத்தில் பாதிக்கப்பட்டோர் தாக்கத்தை உண்மையிலேயே உணர்வர். மருத்துவ உதவிகள் வந்து சேர்ந்திருக்கும். பேரிடரின் பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டிருப்பர்.
ஆபத்துக் குறைப்புக் கட்டம்:
அடுத்து ஒரு பேரிடர் ஏற்பட்டால் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்தக் கட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்கு “மட்டுப்படுத்தல்” எனப் பெயர்.
ஆயத்தக் கட்டம்:
பேரிடரின் பொது அம்சங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது இக்கட்டத்தில் அடங்கும். பேரிடர் எச்சரிக்கைக் குறியீடுகள், பதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெயரும் வழிமுறைகள் மற்றும் முதலுதவி நடவடிக்கை ஆகியவற்றைப் பற்றிய கல்வி இதில் அடங்கும்.
அவசர காலத்தில் இறந்த உடல்களை அகற்றல்
பேரிடர் அவசரகால உதவிப்பெட்டி
நெருப்பில் இருந்து தப்பிக்கும் திட்டம் வீட்டில் நெருப்பு பற்றினால் தப்பிக்கும் பாதைகளைத் திட்டமிட இந்தக் கருவி உங்களுக்கு உதவும்.
பேரிடர் தடுக்கும் விளையாட்டு பேரிடர்களைத் தடுப்பது எப்படி என்று இதன் மூலம் கற்றுக்கொள்ல்லாம்.
பள்ளிப் பாதுகாப்பு பாதுகாப்பான பள்ளிகளைக் கட்டுவது பேரிடரின் போது மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மட்டும் அல்லாமல் பேரிடருக்குப் பின் விரைவான புனரமைப்பையும் ஊக்குவிக்கும்.